டெட் டேர்னர்
டெட் டேர்னர் | |
---|---|
2015இல் டேர்னர் | |
பிறப்பு | இராபர்ட்டு எட்வர்டு டேர்னர் III நவம்பர் 19, 1938 சின்சினாட்டி, ஓகியோ, ஐ.அ. |
கல்வி | மக்கல்லி பள்ளி |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரவுன் பல்கலைக்கழகம் |
பணி | ஊடக பேருரிமையாளர் |
அறியப்படுவது | டிபிஎஸ் மற்றும் சிஎன்என் தொலைக்காட்சிகளின் நிறுவனர் முன்னாள் அட்லாண்டா பிரேவ்ஸ் உரிமையாளர் உலக மற்போர் வாகையர் டெட்ஸ் மொன்டானா கிரில் வள்ளல் |
சொந்த ஊர் | அட்லாண்டா, ஜியார்ஜியா |
சொத்து மதிப்பு | $2 பில்லியன் (2012)[1] |
வாழ்க்கைத் துணை | ஜூலியா கேல் நியே (1960–1964) ஜேன் ஷிர்லி ஸ்மித் (1965–1988) ஜேன் ஃபோன்டா (1991–2001) |
வலைத்தளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
இராபர்ட்டு எட்வர்டு "ட்டெட்" டேர்னர் III (Robert Edward Ted Turner III, பி:நவம்பர் 19, 1938[2]) ஓர் அமெரிக்க ஊடக பேருரிமையாளரும் பொதுநல வள்ளலும் ஆவார். ஓர் வணிகராக அமெரிக்காவின் மின்வட தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சி அலைவரிசை சிஎன்என்னை நிறுவியதற்காக அறியப்படுகிறார். தவிர ஓர் பொதுநல வள்ளலாக ஐக்கிய நாடுகளின் தேவைகளுக்காக $1 பில்லியன் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்; இதனைக்கொண்டே ஐக்கிய நாடுகள் பவுண்டேசன் என்ற பொது ஈகை நிறுவனம் உருவாக்கப்பட்டது. டேர்னர் இந்த நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்தின் தலைவராக உள்ளார்.[3]
டேர்னரின் வணிகப் பேரரசு அவரது தந்தையின் விளம்பர தட்டிகள் வியாபாரத்தில் துவங்கியது. தமது 24வது அகவையில் தந்தையாரின் தற்கொலையை அடுத்து இந்த வணிகத்தில் இறங்கினார்.[4] 1963ஆம் ஆண்டில் டேர்னர் பொறுப்பேற்றுக் கொண்டபோது டேர்னர் அவுட்டோர் அட்வர்டைசிங்கின் பெறுமதி $1 மில்லியன் ஆக இருந்தது. 1970இல் அட்லாண்டாவிலிருந்த மீயுயர் அதிர்வலை வானொலி நிறுவனத்தை வாங்கியதை ஒட்டி டேர்னர் ஒலிபரப்பு அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் கீழ் நிறுவிய சிஎன்என் கம்பிவடத் தொலைக்காட்சியில் 1986ஆம் ஆண்டில் விண்வெளி போய்மீளும் சாலஞ்சர் தோல்வியையும் 1991இல் பாரசீக வளைகுடாப் போர் நிகழ்வுகளையும் உடனுக்குடன் ஒளிபரப்பி செய்தி ஊடகங்களில் ஓர் அதிர்வை உண்டாக்கினார். அட்லாண்டா பிரேவ்ஸ் என்ற தமது மாநில பேஸ்பால் அணியை கையகப்படுத்திக் கொண்டு தேசிய அளவில் அந்த அணி புகழ்பெறச் செய்தார். நல்லெண்ண விளையாட்டுக்கள் (குட்வில் கேம்ஸ்) என்ற விளையாட்டுத் தொடரை நிறுவினார். தொழில்முறை மற்போரில் ஆர்வத்தைத் தூண்டிய 1990களின் பிற்பகுதியில் மிகவும் பரவலான மற்போர் நிறுவனங்களில் ஒன்றான உலக மற்போர் வாகையர் நிறுவனத்தின் உரிமையாளராவார்.
டேர்னரின் சர்ச்சைகளைக் கிளப்பிய கூற்றுக்களால் இவர் "தெற்கின் வாய்" மற்றும் "ஆவேசமான கேப்டன்" என்றெல்லாம் விளிக்கப்பட்டார்.[5][6] டேர்னர் தமது சொத்துக்களை சுற்றுச்சூழல் காரணங்களுக்காகவும் அர்பணித்துள்ளார். 2011இல் ஜான் மலோன் முந்தும்வரை இவரே அமெரிக்காவின் மிகப்பெரும் தனிநபர் நில உரிமையாளராக இருந்து வந்தார்.[7][8] தமது நிலங்களில் பைசன் காளைகளை வளர்க்கிறார்; இவற்றின் இறைச்சியைக் கொண்டு டெட்ஸ் மொன்டானா கிரில் என்ற உணவகச் சங்கிலியை நடத்தி வருகிறார். சுற்றுச்சூழல் நோக்குடைய கேப்டைன் பிளானட்டும் பிளானட்டீர்களும் என்ற தொடரை உருவாக்கி உள்ளார்.
நிறுவனங்கள்
[தொகு]சிஎன்என்
[தொகு]1980 ல் செய்தி தொலைக்காட்சி சேவையான சிஎன்என் ஐ உருவாக்கினார்.இது தற்போது உலகின் முன்னணி செய்தி நிறுவனமாக விளங்குகிறது.
எம்.ஜி.எம் (MGM)
[தொகு]1986 ல் டர்னர் கிர்க் கேர்கோரியன் அவர்களிடம் இருந்து படப்பிடிப்பு நிறுவனமான எம்.ஜி.எம் ஐ $ 1.5 பில்லியன் டாலர் கொடுத்துவாங்கினார். மே 1986 முதல் இது படங்களை தயாரிக்க துவங்கியது.
டர்னர் பொழுதுபோக்கு நிறுவனம்
[தொகு]ஆகஸ்ட் 1986 ல் டர்ணருக்கு சொந்தமான படதயாரிப்பு நிறுவனத்தின் கடல்கடந்த வணிகத்தை மேற்பார்வையிட டர்னர் பொழுதுபோக்கு நிறுவனம் நிறுவப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் , டர்னர் வின்ஸ் ஜிம் க்ரோக்கெட் விளம்பர நிறுவனத்தை வங்கி உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த அமைப்பு (WCW ) என பெயர் மற்றம் செய்தார்.அது மக்மஹோன் உலக மல்யுத்த கூட்டமைப்பின் (WWF ) முக்கிய போட்டியாளராக திகழ்ந்தது.எனினும் இது 2001 ல் டைம் வார்னரின் பதவி களத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பிற்கு விற்கப்பட்டது. 1989 இல் , டர்னர் அவர்கள் வருங்கால உலக பிரச்சினைகளுக்கு சாதகமான அறிவியல் தீர்வுகளை கண்டறிபவருக்கு உதவித்தொகையை அறிவித்தார். இதில் உலகம் முழுவதும் இருந்து வந்த 2500 கண்டுபிடிப்புகளில் இருந்து டேனியல் குயின் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் வெற்றி பெற்றார்.
டிஎன்டி
[தொகு]1988 ஆம் ஆண்டில் டிஎன்டி எனப்படும் டர்னர் தொலைக்காட்சி வலையமைப்பு மூலம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பு செய்ய பயன்படுத்தப்பட்டது.பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த (WCW) போட்டிகளை ஒளிபரப்ப பயன்படுத்தப்பட்டது.
டிசிஎம் (டர்னர் பழங்கால திரைப்படங்கள்)
[தொகு]- 1994 ஆம் ஆண்டில் பழைய திரைப்படங்களை ஒலிபரப்பு செய்ய டர்னர் பழங்கால திரைப்படங்கள் என்ற ஒரு தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்பட்டது.
இதன் முக்கிய நிகழ்ச்சிகளாக 1980 களின் மத்தியில் வெளிவந்த கருப்பு வெள்ளை படங்களில் நிறமாக்கி வெளியிடப்பட்டது. எனினும் 1990 களின் மத்தியில் அதிக செலவு காரணமாக டர்னர் இதை கைவிட்டு அதை அப்டியே வெளியிடத் தொடங்கினார்.
கார்ட்டூன் நெட்வொர்க்
[தொகு]1992 ஆம் ஆண்டு கார்ட்டூன் நெட்வொர்க் என்ற ஒரு சிறுவர்கள் தொலைக்காட்சியை தொடங்கினார்
நூல்கள்
[தொகு]டேர்னருக்கு இருமுனையப் பிறழ்வு நோய் உள்ளது.[9] 1997 ஆம் ஆண்டில் போர்ட்டர் பிப் எழுதிய வாழ்க்கை வரலாறு இது காண்பதுபோல் அவ்வளவு எளிதல்ல (It Ain't As Easy as It Looks) என்ற நூலில், டேர்னர் தமது மனக்கோளாறுடன் தான் படும் வேதனைகளையும் லித்தியம் பயன்படுத்துவது பற்றியும் கூறி உள்ளார். 2008இல் டேர்னர் தமது பணிவாழ்வு மற்றும் தனிவாழ்வு நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் வண்ணம் கால் மீ இட்டெட்]] என்ற நூலை எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Forbes. http://www.forbes.com/profile/ted-turner/.
- ↑ Encyclopædia Britannica. "Ted Turner – Britannica Online Encyclopedia". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் March 24, 2010.
- ↑ "UN Foundation".
- ↑ Porter Bibb (1996). Ted Turner: It Ain't As Easy as It Looks: The Amazing Story of CNN. Virgin Books. pp. 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86369-892-1.
- ↑ Porter Bibb (1996). Ted Turner: It Ain't As Easy as It Looks: The Amazing Story of CNN. Virgin Books. pp. 138, 272, 283, 442. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86369-892-1.
- ↑ Koepp, Stephen (April 12, 2005). "Captain Outrageous Opens Fire". Time இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 29, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101029182734/http://www.time.com/time/magazine/article/0,9171,1048325,00.html.
- ↑ Doyle, Leonard (December 1, 2007). "Turner becomes largest private landowner in US – Americas, World". London: The Independent. http://www.independent.co.uk/news/world/americas/turner-becomes-largest-private-landowner-in-us-761711.html. பார்த்த நாள்: March 29, 2009.
- ↑ "For Land Barons, Acres by the Millions". த நியூயார்க் டைம்ஸ். January 28, 2011. http://www.nytimes.com/2011/01/29/us/29land.html.
- ↑ At long last, he's citizen Ted
மேலும் அறிய
[தொகு]- Call Me Ted by Ted Turner and Bill Burke (Grand Central Publishing, 2008) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-446-58189-9
- Racing Edge by Ted Turner (Simon & Schuster, 1979) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-24419-1
வாழ்க்கை வரலாறுகள்
[தொகு]- Media Man: Ted Turner's Improbable Empire by Ken Auletta (W. W. Norton, 2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-05168-4
- Clash of the Titans: How the Unbridled Ambition of Ted Turner and Rupert Murdoch Has Created Global Empires that Control What We Read and Watch Each Day by Richard Hack (New Millennium Press, 2003) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893224-60-0
- Me and Ted Against the World: The Unauthorized Story of the Founding of CNN by Reese Schonfeld (HarperBusiness, 2001) 0060197463
- Ted Turner Speaks: Insights from the World's Greatest Maverick by Janet Lowe (Wiley, 1999) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-34563-6
- Riding A White Horse: Ted Turner's Goodwill Games and Other Crusades by Althea Carlson (Episcopal Press, 1998) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9663743-0-4
- Porter Bibb (1996). Ted Turner: It Ain't As Easy as It Looks: The Amazing Story of CNN. Virgin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86369-892-1.
- Citizen Turner: The Wild Rise of an American Tycoon by Robert Goldberg and Gerald Jay Goldberg (Harcourt, 1995) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-118008-3
- CNN: The Inside Story: How a Band of Mavericks Changed the Face of Television News by Hank Whittemore (Little Brown & Co, 1990) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-316-93761-4
- Lead Follow or Get Out of the Way: The Story of Ted Turner by Christian Williams (Times Books, 1981) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8129-1004-4
- Atlanta Rising: The Invention of an International City 1946–1996 by Frederick Allen (Longstreet Press, 1996) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56352-296-9
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Turner Foundation
- வார்ப்புரு:NYTtopic
- டெட் டேர்னர் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- வார்ப்புரு:Nndb
- Appearances on C-SPAN
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Ted Turner
- Turner on Oprah Master Class, aired January 29, 2012 பரணிடப்பட்டது 2013-09-01 at the வந்தவழி இயந்திரம்