உள்ளடக்கத்துக்குச் செல்

டெசிபெல் வாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெசிபெல் வாட் (Decibel watt) என்பது இரண்டு திறன்களுக்கு (power) இடையிலோ அல்லது வீச்சுகளுக்கு (amplitude) இடையிலோ உள்ள விகிதத்தை (ratio) குறிப்பதாகும்.[1] எடுத்துகாட்டாக "P" என்பதை அளக்கப்பட்ட திறனாகவும் (measured power) "Po" என்பதை மேற்கோள் திறனாகவும் (reference value) கொண்டால் டெசிபெல் என்பதை பின்வரும் சமன்பாடு மூலம் கணக்கிடலாம்.

இதே போன்று "U" என்பதை அளக்கப்பட்ட வீச்சாகவும் (measured amplitude) "Uo" என்பதை மேற்கோள் வீச்சாகவும் (reference value) கொண்டால் டெசிபெல் என்பதை பின்வரும் சமன்பாடு மூலம் கணக்கிடலாம்.

பொதுவாக ஒரு வலையமைப்பிலோ (Network) அல்லது மின்னணுச் சாதனத்திலோ (electronic device) ஏற்படும் உயர்வையோ (Gain) அல்லது தாழ்வையோ (Loss) குறிபிட்ட பயன்படும் ஒரு அலகு ஆகும். உதரணமாக "Po" என்பதை உள்ளீடு திறனாகவும் "P" என்பதை வெளியீடு திறனாகவும் கொண்டால் மேற்கண்ட சமன்பாட்டின் மூலம் அதன் dB-யை கணக்கிடலாம். இதில் Po-ஐ ஒரு வாட்டாக (1 Watt) கொண்டால் P-ஐ டெசிபெலில் dBW என்றும் Po-ஐ ஒரு மில்லிவாட்டாக (1 milliWatt) கொண்டால் P-ஐ டெசிபெலில் dBm என்று குறிபிடுவது வழக்கம்.[2]

டெசிபெலில் இருந்து எண்ணிற்கு மாற்றும் கணக்கீடு

[தொகு]

டெசிபெல் என்பது ஒரு அலகு என்றாலும் அது ஒரு எண் மட்டுமே. இது ஒரு விகிதம் என்பதால் அலகுகள் சமன் செய்து முடிவில் எண்ணாக மட்டுமே இருக்கும். பின்வரும் ஒரு சிறிய கணக்கீடு மூலம் விளக்கலாம்.

3+0.7=3.7 dB = 1.995262X1.174898=2.344299 இது ஒரு திறனின் விகிதம் (power ratio).

3/10=0.3

10 0.3=1.995262

இது போன்றே

0.7-ஐ கணகிட்டால் 1.174898 கிடைக்கும்.

1.412538X1.083927=1.531088 என்பது ஒரு மின்னழுத்த விகிதம் (voltage ratio).

இந்த கணக்கீட்டையும் மேற்கண்டவாறு செய்யலாம்.

டெசிபெலில் மாற்ற உதவும் பட்டியல் [3]

[தொகு]
dB P/P0 U/U0
0 1.000000 1.000000
0.1 1.023293 1.011579
0.2 1.047129 1.023293
0.3 1.071519 1.035142
0.4 1.096478 1.047129
0.5 1.122018 1.059254
0.6 1.148154 1.071519
0.7 1.174898 1.083927
0.8 1.202264 1.096478
0.9 1.230269 1.109175
1.0 1.258925 1.122018
2.0 1.584893 1.258925
3.0 1.995262 1.412538
4.0 2.511886 1.584893
5.0 3.162278 1.778279
6.0 3.981072 1.995262
7.0 5.011872 2.238721
8.0 6.309573 2.511886
9.0 7.943282 2.818383
10 10 3.162278
20 102 10.00000
30 103 31.622780
40 104 102
50 105 316.2278
60 106 103
70 107 3162.278
80 108 104
90 109 31622.78
100 1010 105

மேற்கோள்

[தொகு]
  1. David K. Barton & Sergey A. Leonov. Radar Technology Encyclopedia, ARTECH HOUSE, INC., Boston·.London, 1998, Page No. 105.
  2. Thompson, E Ambler; Taylor, Barry N (2008). "Guide for the use of the International System of Units (SI)". NIST Special Publication 811: p. 30. doi:10.6028/nist.sp.811e2008. 
  3. David K. Barton & Sergey A. Leonov. Radar Technology Encyclopedia, ARTECH HOUSE, INC., Boston·.London, 1998, Page No. 106.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெசிபெல்_வாட்&oldid=4099896" இலிருந்து மீள்விக்கப்பட்டது