உள்ளடக்கத்துக்குச் செல்

டீப் துறோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Deep Throat
டீப் துரோட்
"டீப் துரோட்" சுவரொட்டி
இயக்கம்ஜெரார்ட் டாமியானோ
தயாரிப்புலூயிஸ் பெரயினோ
கதைஜெரார்ட் டாமியானோ
நடிப்புஹாரி ரீம்ஸ்
லிண்டா லவ்லேஸ்
டாலி ஷார்ப்
கேரல் கானர்ஸ்
ஒளிப்பதிவுஹாரி ஃபிலெக்ஸ்
படத்தொகுப்புஜெரார்ட் டாமியானோ
வெளியீடு1972
ஓட்டம்61 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$22,500
மொத்த வருவாய்$600 மில்லியன் (claimed)
$30 – 50 மில்லியன் (உறுதி செய்யப்பட்டது)[1]

டீப் துறோட் (Deep Throat) 1972இல் வெளிவந்த அமெரிக்கப் போர்னோகிராபி திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் முக்கிய நடிகை லிண்டா லவ்லேஸ் ஆவார். இத்திரைப்படத்தின் பெயர் ஒரு வகை வாய்வழிப் பாலுறவை குறிக்கும்; இத்திரைப்படம் முழுவதிலும் லிண்டா லவ்லேஸ் பல்வேறு ஆண்களை டீப் துரோட் செய்கிறார்.

அமெரிக்காவின் நடுவண் பரிசோதனை துறை (FBI) மதிப்பீட்டின் படி இத்திரைப்படம் மொத்தத்தில் ஏறத்தாழ $100 மில்லியன் வசூல் பெற்றுள்ளது. இத்திரைப்படம் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் நுழைந்தது. 1970களில் அமெரிக்க அரசியலில் நடந்த வாட்டர்கேட் ஊழல் நிகழ்வில் அனாமதேய தகவலளாளி இப்பெயரால் குறிப்பிட்டார்.

கதை[தொகு]

லிண்டா லவ்லேஸ் ஒரு அழகான பெண். அவள் தன்னுடைய நண்பன் ஹெலனிடம் புணர்ச்சிப் பரவசநிலை அடைய வழிகேட்கிறாள். குழுப் பாலுறவு முடிந்த பிறகு ஹெலன் லின்டாவிற்கு ஒரு மனநல மருத்துவரை பரிந்துரை செய்கிறார். அவருடைய பெயர் டாக்டர்.யோங். அவர் லிண்டாவை ஆய்வு செய்து பரவநிலை அடையக்கூடிய உறுப்பு அவளுடைய தொண்டைப்பகுதியில் உள்ளதை அறிகிறார்.

மருத்துவர். யோங், லிண்டாவிற்கு வாய்வழிப் பாலுறவு குறித்தானதை விளக்குகிறார். வாய் வழிபாலுறவில் நிறைய திறன்களை லிண்டா கற்றுக்கொள்கிறாள். லிண்டா மருத்துவரை திருமணம் செய்து கொள்ள வலியுருத்துகிறார். அதற்கு மருத்துவர் லிண்டாவிற்கு தன்னுடைய மருத்துவமனையிலேயே வேலை தருவதாகவும், டீப் திரொட்டிங் என்ற பெயரில் வாய்வழி பாலுறவு செய்து லிண்டா நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யவும் கூறுகிறார். ஒரு நாள் லிண்டா தனக்கான இணையை கண்டுபிடிப்பதில் கதை முடிவடைகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. Hiltzik, Michael (February 24, 2005). "'Deep Throat' Numbers Just Don't Add Up". Los Angeles Times. http://articles.latimes.com/2005/feb/24/business/fi-golden24. பார்த்த நாள்: July 23, 2010. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=டீப்_துறோட்&oldid=2909590" இலிருந்து மீள்விக்கப்பட்டது