உள்ளடக்கத்துக்குச் செல்

டி புறாக்ளி அலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவாண்டம் விசையியலில், பருப்பொருள் அலைகள் (சடத்துவ அலைகள், matter waves), அல்லது டி புறாக்ளி அலைகள் (de Broglie waves, /dəˈbrɔɪ/) என்பது சடப்பொருட்களில் காணப்படும் அலை-துகள் இருமை பற்றிய கோட்பாடாகும். இக்கோட்பாட்டை லூயி டி பிராக்லி என்பவர் தனது முனைவர் பட்ட ஆய்விற்காக முன்வைத்தார்.[1] இது எத்தன்மைத்தாயினும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருளினுக்கு ஓர் அலைபண்பும் உள்ளது .இவ்வலையே டி புறாக்ளி அலை எனப்படுகிறது.

எலக்ட்ரான் விளிம்பு விளைவு சோதனையில் சடத்துவ அலைகள்

துணிக்கை ஒன்றின் அலைநீளம் அதன் உந்தத்திற்கு நேர்மாறு விகித சமனாக இருக்கும் என்பதை டி புறாக்ளி தொடர்புகள் எடுத்துரைக்கின்றன. இந்த அலைநீளம் டி புறாக்ளி அலைநீளம் எனவும் அழைக்கப்படுகின்றது. அத்துடன் டெ புறாக்லி உய்த்தறிந்ததன் படி, பருப்பொருள் அலைகளின் அதிர்வெண், ஆற்றலுக்கு E நேர்விகித சமனாக இருக்கும்.[2]

டி புறாக்லி சமன்பாடுகள் துணிக்கை ஒன்றின் அலைநீளம் λ, உந்தம் p, அதிர்வெண் f, இயக்க ஆற்றல் E (ஓய்வு ஆற்றல், நிலையாற்றல் தவிர்ந்த) ஆகியவற்றைத் தொடர்பு படுத்துகிறது:[2]

இங்கு உந்தம் p = mv, m என்பது பொருளின் நிறை, v என்பது அதன் திசை வேகம், h என்பது பிளாங்கு மாறிலி. இச்சமன்பாடுகள் பின்வருமாறும் எழுதப்படலாம்:

இங்கு

  • என்பது குறைக்கப்பட்ட பிளாங்கு மாறிலி அல்லது டிராக்கின் மாறிலி (Dirac's constant),
  • என்பது கோண அலையெண்,
  • என்பது கோண அதிர்வெண்.

இரண்டு வகை சமன்பாடுகளிலும், இரண்டாவது மேக்ஸ் பிளாங்க், ஐன்ஸ்டைன் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டதனால், பிளாங்கு-ஐன்ஸ்டைன் தொடர்பு எனவும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. L. de Broglie, Recherches sur la théorie des quanta (Researches on the quantum theory), Thesis (Paris), 1924; L. de Broglie, Ann. Phys. (Paris) 3, 22 (1925).
  2. 2.0 2.1 Resnick, R.; Eisberg, R. (1985). Quantum Physics of Atoms, Molecules, Solids, Nuclei and Particles (2nd ed.). New York: John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-87373-X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_புறாக்ளி_அலை&oldid=3848990" இலிருந்து மீள்விக்கப்பட்டது