டி. பி. எம். மொகைதீன் கான்
டி. பி. எம். மொகைதீன் கான் | |
---|---|
பாளையங்கோட்டை தொகுதியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2011 - தற்போது வரை | |
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர். | |
பதவியில் 2006–2011 | |
பாளையங்கோட்டை தொகுதியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2006 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1947 |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | திமுக |
சமயம் | இசுலாம் |
டி. பி. எம். மொகைதீன் கான் (T. P. M. Mohideen Khan, பிறப்பு; திருநெல்வேலி 19 சூலை 1947) என்பவர் தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முன்னாள் சுற்றுசூழல் அமைச்சரும் ஆவார். இவர் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இருந்து நான்கு முறை தி.மு.க சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
பிறப்பும் கல்வியும்[தொகு]
முஹம்மது ராவுத்தர் என்பவருக்கு மகனாக 19 சூலை 1947 அன்று திருநெல்வேலியில் பிறந்த இவர், பாளையங்கோட்டை புனித சேவியர் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றுள்ளார்.[2]
வாழ்க்கை[தொகு]
டி, பி, எம். மொகைதீன் கான் ஒரு தொழிலதிபராக இருந்தவர். திராவிட இயக்கத்தின் மீதும், தி.மு.க நிறுவனரான அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி ஆகியோர் மீதும் பெரும்பற்று கொண்டவராக விளங்கினார். இந்தி மட்டும் ஆட்சிமொழி சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்த காலத்தில், இவர் தி.மு, க.வில் இணைந்து பல பேருந்து மறியல், தொடர்வண்டி மறியல் போன்றவற்றில் ஈடுபட்டார். இதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. தி.மு.கவில் பல பொறுப்புகளை வகித்த இவர், இறுதியில் 2001 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு பெற்று, முதன் முதலில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2006 ஆண்டும் தி. மு.க. சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட இவர் தமிழக சுற்று சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பணிகள்[தொகு]
டி. பி. மொகிதீன் கான் தமிழக சுற்றுசூழல் அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுத்தப்பட்டது. வாரியம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, வாரியத்தில் பெறுவதற்கான அனுமதிகள் மின்னணு முறையில் ஒரு மாதத்திற்குள் வழங்கும் வகையில் விரைவாக்கப்பட்டது. இந்த செயல்முறை முதலீட்டாளர்களுக்கும், மாநிலத்துக்கும் பயனளிக்கும் வகையில் இருந்தது.
மேற்கோள்கள்[தொகு]
- 1947 பிறப்புகள்
- இந்திய முஸ்லிம்கள்
- வாழும் நபர்கள்
- தமிழக முன்னாள் அமைச்சர்கள்
- திருநெல்வேலி மாவட்ட நபர்கள்
- 12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- திருநெல்வேலி அரசியல்வாதிகள்