டி. பி. எம். மொகைதீன் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. பி. எம். மொகைதீன் கான்
பாளையங்கோட்டை தொகுதியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2011 - தற்போது வரை
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.
பதவியில்
2006–2011
பாளையங்கோட்டை தொகுதியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2006
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1947
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிதிமுக

டி. பி. எம். மொகைதீன் கான் (T. P. M. Mohideen Khan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி நகரத்தில் 1947 ஆம் ஆண்டு சூலை மாதம் 19 ஆம் நாள் முகமது ராவுத்தர் என்பவருக்கு இவர் மகனாகப் பிறந்தார். பாளையங்கோட்டை புனித சேவியர் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றுள்ளார்.[1] திராவிட முன்னேற்றக் கட்சியின் உறுப்பினரான இவர் மாநிலத்தின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்தார். பாளையங்கோட்டை மாநில சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 2001 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஒரே தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

டி, பி, எம். மொகைதீன் கான் ஒரு தொழிலதிபராக தன் வாழ்க்கையை தொடங்கினார். திராவிட இயக்கத்தின் மீதும், தி.மு.க நிறுவனரான அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி ஆகியோர் மீதும் பெரும்பற்று கொண்டவராக விளங்கினார். இந்தி மட்டும் ஆட்சிமொழி சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்த காலத்தில், இவர் தி.மு, க. கட்சியில் இணைந்து பேருந்து மறியல், தொடர்வண்டி மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார். பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. தி.மு.கவில் பல பொறுப்புகளை வகித்த இவர், இறுதியில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு பெற்று, முதன் முதலில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2006 ஆண்டும் தி. மு.க. சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட இவர் தமிழக சுற்று சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பணிகள்[தொகு]

டி. பி. மொகிதீன் கான் தமிழக சுற்றுசூழல் அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுத்தப்பட்டது. வாரியம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, அனுமதி மின்னணு முறையில் ஒரு மாதத்திற்குள் வழங்கும் வகையில் விரைவாக்கப்பட்டது. இந்த செயல்முறை முதலீட்டாளர்களுக்கும், மாநிலத்துக்கும் பயனளிக்கும் வகையில் இருந்தது.

சர்ச்சை[தொகு]

2010 ஆம் ஆண்டில், குண்டர்களால் தாக்கப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரியை தன்னுடன் வாகனங்கள் பல இருந்தபோதிலும் உடனடியாக உதவி செய்யாமல் காவல்துறை அதிகாரி சாலையில் இறந்துவிட காரணமானார். சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன், 20 நிமிடம் தன்னுடைய வாகனத்தில் இருந்து இறங்காமல், இந்த சம்பவத்திற்கு வெறும் சாட்சியாக நின்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. candidate information
  2. T. P. M. Mohideen Khan profile at Tamil Nadu government website
  3. Sam Daniel (8 January 2010). "Policeman attacked on road, ministers stare from cars, don't help". NDTV. Archived from the original on 11 January 2010. பார்க்கப்பட்ட நாள் 27 October 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._எம்._மொகைதீன்_கான்&oldid=3926648" இலிருந்து மீள்விக்கப்பட்டது