டினிபெக்
டினிபெக் என்பவர் 1341 ஆம் ஆண்டு முதல் 1342 ஆம் ஆண்டு வரை தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாக பதவி வகித்தவர் ஆவார்.
சுயசரிதை
[தொகு]இவரது தந்தை உஸ்பெக் கான். தாய் செரிதும்கா கதுன். 1328 ஆம் ஆண்டு இவர் வெள்ளை நாடோடி கூட்டத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இபின் பட்டுடா போன்ற வரலாற்று ஆசிரியர்களின் இஸ்லாமிய ஆதாரங்கள் இவர் உஸ்பெக்கின் விருப்பத்திற்குரிய மகன் என்று கூறுகின்றன. வாரிசாக வளர்க்கப்பட்டவர் என்று கூறுகின்றன.[1] 1330 ஆம் ஆண்டு இவரது அண்ணன் தைமூர்பெக்கின் இறப்பு வரை இவர் முதன்மை வாரிசாக வரவில்லை. இவரது ஆட்சிக்காலத்தில் லித்துவேனியாவின் கிராண்ட் டுச்சி, வோலினியாவை கைப்பற்றியது. கிழக்குப் பகுதியில் இருந்த சகதை நாட்டினருக்கு எதிராக சண்டையிட்ட போது இவரது தம்பி ஜானிபெக்கால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மரபு
[தொகு]அரியணைக்கு மிகப் பொருத்தமான நபர் டினிபெக் தான் என்று இபின் பட்டுடா நினைவு கூறுகிறார்.[1] இவர் கிறித்தவர்களுக்கு ஆதரவானவராக கருதப்பட்டார்.[2] திருத்தந்தை பன்னிரண்டாம் பெனடிக்ட்டிடமிருந்து சில கடிதங்களையும் பெற்றார். திருத்தந்தை இவரை கிறித்தவ மதத்திற்கு மாறுமாறு ஊக்குவித்தார்.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 Gibb, H. A. R. (2017-07-05). The Travels of Ibn Battuta, A.D. 1325-1354: Volume II (in ஆங்கிலம்). 490: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-53992-0.
{{cite book}}
: CS1 maint: location (link) - ↑ Spuler, Bertold (1969). The Muslim world: a historical survey (in ஆங்கிலம்). Brill Archive. p. 54.
- ↑ Ryan, James D. (1998). "Christian Wives of Mongol Khans: Tartar Queens and Missionary Expectations in Asia". Journal of the Royal Asiatic Society 8 (3): 411–421. பன்னாட்டுத் தர தொடர் எண்:1356-1863. https://www.jstor.org/stable/25183572.
ஆதாரங்கள்
[தொகு]- David Morgan, The Mongols