உள்ளடக்கத்துக்குச் செல்

டிக்சன் கடனீர் இடுக்கேரி

ஆள்கூறுகள்: 72°50′N 26°57′W / 72.833°N 26.950°W / 72.833; -26.950
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிக்சன் கடனீர் இடுக்கேரி
Dicksons Fjord
Map
டிக்சன் கடனீர் இடுக்கேரியின் அமைவிடம்
டிக்சன் கடனீர் இடுக்கேரி is located in கிறீன்லாந்து
டிக்சன் கடனீர் இடுக்கேரி
டிக்சன் கடனீர் இடுக்கேரி
Location in Greenland
அமைவிடம்ஆர்க்டிக்
ஆள்கூறுகள்72°50′N 26°57′W / 72.833°N 26.950°W / 72.833; -26.950
பெருங்கடல்/கடல் மூலங்கள்கெம்பே ப்ஜோர்ட்
கிங் ஆஸ்கார் கடனீர் இடுக்கேரி
டேவி சவுண்ட்
கிரீன்லாந்து கடல்
வடிநில நாடுகள்கிறீன்லாந்து
அதிகபட்ச நீளம்35 km (22 mi)
அதிகபட்ச அகலம்5 km (3.1 mi)
குடியேற்றங்கள்0

டிக்சன் கடனீர் இடுக்கேரி (Dickson Fjord, (டேனிய மொழி: Dicksons Fjord) என்பது என்பது கிழக்கு கிரீன்லாந்தின் கிங் கிறிஸ்டியன் எக்ஸ் லேண்டில் உள்ள ஒரு கடனீர் இடுக்கேரி ஆகும்.[1]

நிர்வாக ரீதியாக, இது வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா பகுதியில் உள்ளது. இந்தக் கடனீர் இடுக்கேரி கிங் ஆஸ்கார் கடனீர் இடுக்கேரி அமைப்பின் ஒரு பகுதியாகும்.[2]

வரலாறு

[தொகு]

1897 ஆம் ஆண்டு எஸ். ஏ. ஆண்ட்ரீயின் ஆர்க்டிக் பலூன் பயணத்தில் தப்பியவர்களைத் தேடுவதற்காக ஸ்வீடி கிரீன்லாந்து பயணத்தின் போது 1899 ஆம் ஆண்டில் ஸ்வீடிஷ் ஆர்க்டிக் ஆய்வாளர் ஆல்ஃபிரட் கேப்ரியல் நாதோர்ஸ்ட்டால் இந்த கடனீர் இடுகேரி ஆய்வு செய்யப்பட்டது. இந்தப் பணியின் நிதி ஆதரவாளர்களில் ஒருவரான ஸ்வீடிஷ் அரசியல்வாதியான ராபர்ட் டிக்சனின் (1843-1924) நினைவாக நாத்தோர்ஸ்ட் அவரது பெயரை இட்டார்.[3]

1930 இல் நோர்வே கப்பல் வெஸ்லேகாரி டிக்சன் கடனீர் இடுகேரியின் தலைப்பகுதியை அடைந்து. ஆனால் திடீரென ஏற்பட்ட பேரலைகளால் கப்பலால் நங்கூரமிட இயலவில்லை.[4]

16 செப்டம்பர் 2023 அன்று, டிக்சன் கடனீர் இடுக்கேரியில் பனி மற்றும் பாறைகள்ளினாலான ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த நீர்நிலையில் 200 மீட்டர் உயர ஆழிப்பேரலை ஏற்பட்டடது. அந்த அலையானது நீர்நிலையின் எதிர்ப்பக்கம் சென்று மோதி மீண்டும் திரும்பியது. திரும்பிய அலையின் உயரம் 110 மீட்டராக இருந்தது. போகப் போக அலையின் உயரம் ஏழு மீட்டராகக் குறைந்தாலும் இந்தக் குறுகிய நீர்நிலையில் பத்தாயிரம் முறை அலைகள் எதிர் எதிர்க் கரைகளில் மோதித் திரும்பின. இது ஒன்பது நாட்கள் நீடித்தது. இந்த ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அதிர்வுகள் உலகம் முழுவதும் பரவியதன் விளைவாக உலகம் முழுவதும் அசாதாரணமாக நில அதிர்வுகள் பதிவாயின.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dicksons Fjord". Mapcarta. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
  2. Prostar Sailing Directions 2005 Greenland and Iceland Enroute, p. 119
  3. Catalogue of place names in northern East Greenland, Geological Survey of Denmark and Greenland
  4. Sailing Directions for East Greenland and Iceland, p. 117
  5. Conversation, The (2024-09-14). "Bizarre, nine-day seismic signal caused by epic landslide in Greenland". Ars Technica. பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.
  6. "Greenland mega-tsunami led to week-long oscillating fjord wave". ScienceDaily (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-10.