டாவி ரோயிவாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாவி ரோயிவாசு
Taavi Rõivas.jpg
எசுத்தோனியா பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 மார்ச் 2014
குடியரசுத் தலைவர் டூமாசு என்றிக்கு இல்வெசு
முன்னவர்
சமூகநல அமைச்சர்
பதவியில்
11 திசம்பர் 2012 – 26 மார்ச் 2014
பிரதமர் ஆன்ட்ரசு அன்சிப்
முன்னவர் அன்னோ பெவ்குர்
பின்வந்தவர் எல்மென் குட் (சமூக பாதுகாப்பு)
ஊர்மசு குருசெ (நலவாழ்வு மற்றும் தொழிலாளர் நலம்)
தனிநபர் தகவல்
பிறப்பு 26 செப்டம்பர் 1979 (1979-09-26) (அகவை 42)
தாலின், எசுத்தோனியா
அரசியல் கட்சி எசுத்தோனிய சீர்திருத்தக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லூயிசா வர்க்கு
பிள்ளைகள் 1 மகள்
படித்த கல்வி நிறுவனங்கள் தர்து பல்கலைக்கழகம்

டாவி ரோயிவாசு (Taavi Rõivas, பிறப்பு: 26 செப்டம்பர் 1979) எசுத்தோனிய அரசியல்வாதியும் மார்ச் 26, 2014 முதல் அந்நாட்டின் பிரதமராக இருப்பவருமாவார். ஏப்ரல் 6, 2014 முதல் எசுத்தோனிய சீர்திருத்தக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.[1]

பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக ரோயிவாசு சமூக நலவாழ்வு அமைச்சராக (2012–2014) பணியாற்றி உள்ளார். மார்ச் 14, 2014 அன்று அப்போதைய பிரதமர் ஆன்ட்ரசு அன்சிப்பிற்கு அடுத்து பிரதமராக பொறுப்பேற்க நாட்டுத்தலைவர் டூமாசு என்றிக்கு இல்வெசால் நியமிக்கப்பட்டார்.[2] இதனையடுத்து புதிய அரசு அமைக்க சீர்திருத்தக் கட்சிக்கும் சமூக மக்களாட்சி கட்சிக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு தலைமை வகித்தார்.[3] இரு கட்சிகளுக்குமிடையே கூட்டணி உடன்பாடு மார்ச் 20 அன்று கையொப்பமிடப்பட்டது.[4] மார்ச் 26, 2014இல் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக இளைய அரசுத்தலைவராக ரோயிவாசு விளங்குகின்றார்.[5] மார்ச் 1, 2015 அன்று நடந்த பொதுத்தேர்தலில் இவரது கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Taavi Rõivas sai Reformierakonna esimeheks - Eesti uudised - Postimees.ee". Postimees (6 April 2014). பார்த்த நாள் 3 March 2015.
  2. "Rõivas: küllap on võimalik ka autoriteet tööga välja teenida". Postimees (12 March 2014). பார்த்த நாள் 3 March 2015.
  3. "New Coalition Will Split Two Ministries". News - ERR. பார்த்த நாள் 3 March 2015.
  4. "Reform Party and Social Democrats Sign Coalition Agreement". News - ERR. பார்த்த நாள் 3 March 2015.
  5. "Taavi Roivas designated Estonia PM, EU's youngest". GlobalPost. பார்த்த நாள் 3 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாவி_ரோயிவாசு&oldid=2216287" இருந்து மீள்விக்கப்பட்டது