டாக்கா விமானநிலைய இரயில் நிலையம்
விமான நிலைய ரயில் நிலையம் (Airport railway station) வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள ஓர் இரயில் நிலையமாகும் . [1] பிமான் பந்தர் ரயில் நிலையம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. அசுரத் சாச்சலால் பன்னாட்டு விமான நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள இதை விமான நிலைய சாலையில் மூலம் அணுகலாம்.
கண்ணோட்டம்
[தொகு]கமலாபூர் ரயில் நிலையத்திற்குப் பிறகு டாக்காவில் இரயில்களுக்கான இரண்டாவது நிறுத்தம் இதுவாகும். இந்தியாவிலிருந்தும் உள்நாட்டில் நோகாலி, சில்கெட்டு, ராச்சாகி, சிட்டகாங்கு, கொமிலா மற்றும் பல முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களில் இருந்தும் இரயில்கள் இங்கு வருகின்றன. இந்நிலையம் இரட்டை பாதைகள் கொண்டதாகும். இது குறுகிய மற்றும் அகலப் பாதை வகை இரண்டும் இங்கு உள்ளன. ராச்சாகி, குல்னாவிலிருந்து வரும் வண்டிகளும் மைத்ரீ விரைவுவண்டி போன்ற அகலப் பாதை இரயில்கள் இந்த நிலையத்தில் எளிதாக நிறுத்த முடியும். மேலும் விமான நிலைய இரயில் நிலையம் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது .
2014 ஆம் ஆண்டில் இரயில்வே அதிகாரிகள் வாகன நிறுத்துமிடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டமைப்புகளை இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "4 hurt as shed over Dhaka Airport Railway Station platform collapses" (in en). The Daily Star. 2017-08-31. https://www.thedailystar.net/city/4-hurt-shed-over-dhaka-airport-railway-station-platform-collapses-1456840.
- ↑ "Structures evicted along cantonment rail tracks". Dhaka Tribune. 2014-09-23. https://www.dhakatribune.com/uncategorized/2014/09/23/structures-evicted-along-cantonment-rail-tracks.
புற இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Airport railway station, Dhaka தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.