டவுனிங் சாலை
டவுனிங் சாலை (Downing Street) ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்து பகுதியில் உள்ள இலண்டன் மாநகரில் உள்ள ஓர் முதன்மையான சாலையாகும். இருநூறு ஆண்டுகளாக மிகவும் மூத்த இரு பிரித்தானிய அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ குடியிருப்புகளைக் கொண்ட தெருவாகும் இது: ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பொறுப்பேற்கும் கருவூலத்தின் முதன்மை பிரபு (First Lord of the Treasury) மற்றும் நிதிஅமைச்சர் பொறுப்பேற்கும் கருவூலத்தின் இரண்டாம் பிரபு(Second Lord of the Treasury)ஆகியோர் ஆவர். இங்குள்ள 10 இலக்கமிட்ட முகவரி மிகவும் புகழ்பெற்றது. இதுவே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரின் அலுவல்முறை இருப்பிடமாகும். எண் 11 இது போன்றே நிதி அமைச்சரின் அலுவலகத்தைக் குறிக்கும்.
இந்தத்தெரு மத்திய லண்டனில் வைட்ஹால் பகுதியில் இங்கிலாந்து பாராளுமன்றம் மற்றும் பக்கிங்காம் அரண்மனை ஆகியவற்றிற்கு அருகாமையில் அமைந்துள்ளது.1680களில் ஹம்டன் அவுஸ் என்ற கட்டிடம் இருந்தவிடத்தில் சேர் ஜியார்ஜ் டௌனிங் என்பவரால் இத்தெரு கட்டப்பட்டது. பிரதமர், நிதி அமைச்சர், மற்றும் முதன்மை கொறடா ஆகியோருக்கான அலுவல்முறை இருப்பிடங்கள் ஒரு பக்கத்தில் உள்ளன. மறு பக்கத்தில் இருந்த வீடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டு அங்கு வெளியுறவுத் துறை மற்றும் பொதுநலவாய அலுவலகங்கள் அமைந்துள்ளன.
வெளியிணைப்புகள்[தொகு]
- Number 10 official website
- Downing Street at the Survey of London online (see items 14-18 in the table of contents).
ஆள்கூறுகள்: 51°30′11.6″N 0°07′39.0″W / 51.503222°N 0.127500°W