ஞான இலக்கியம்
பெருங்கனிவு இலக்கியம் (Wisdom literature) அல்லது ஞான இலக்கியம் அல்லது பெருமதி இலக்கியம் அல்லது சான்றோர் இலக்கியம் என்பது பொதுவாக பண்டைய கிழக்கத்திய நாடுகளின் அருகில் காணப்பட்ட இலக்கியக்கலையின் வகை ஆகும். இது அறிஞர்கள், சித்தர்கள், முனிவர்களின் போதனைகளான புனிதத்தன்மை, அறம், நல்லொழுக்கங்கள் பற்றிய கூற்றுக்களை உள்ளடக்கியது. இக்கலை மரபு வாய்வழி கதைகூறல் நுட்பத்தைத் தனிநடையாகப் பயன்படுத்தி இருந்தாலும், இது எழுத்துவடிவிலும் பரப்பப்பட்டது.[1][2][3]
இவ்விலக்கிய வகை பெரிதும் நிலக்கிழார்களின் மரபாக இருந்தது. இது இஸ்லாமிய, மேற்கத்திய மறுமலர்ச்சி இலக்கியத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இது ஞான இலக்கியத்தில் மதச்சார்பற்ற அறிவாற்றலாகவும் இருந்தது.கெசியாடு அவர்களின் தரமான பண்டைய நீதிபோதனைகள் தரும் செய்யுட்கள், அவரது 'பணிகளிலும்' 'நாட்களிலும்' அறிவின் வாயிலாகக் கருதப்பட்டன. இது எகிப்து, பாபிலோனியா மற்றும் இஸ்ரேலின் ஞான இலக்கியத்தை ஒத்திருந்தது.
பண்டைய எகிப்து இலக்கியம்
[தொகு]பண்டைய எகிப்து இலக்கியத்தில் ஞான இலக்கியம் சேபெய்டு (“கற்பித்தல்”) இலக்கிய வகையைச்சார்ந்தது. இது நடுவண் எகிப்து இராச்சியத்தின்போது மலர்ந்து, புதிசீராச்சியத்தின்போது அதிகாரப்பூர்வமானது. இவ்விலக்கிய வகையின் குறிப்பிடத்தக்க படைப்புகளான ககேம்னியின் போதனைகள், தகோதெபின் நீதிமொழிகள், அமெனெம்காட்டின் போதனைகள், பணிவும் கட்டுபாடுமுள்ள போதனைகள் ஆகியவை ஆகும்.
வேதாகம ஞான இலக்கியமும் யூத நூல்களும்
[தொகு]ஞான இலக்கியத்தின் அதிக புகழ்பெற்ற எடுத்துகாட்டுகள் வேதாகமத்தில் காணப்படுகின்றன.
ஞானச் (சேபியன்சியல்) நூல்கள்
[தொகு]போதனைகள் நிறைந்த (சேபியன்சியல்) நூல்கள் அல்லது “ஞானத்தின் நூல்கள்” என்ற சொல் வேதாகம ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டது. இது எபிரேய விவிலியத்தின், கிரேக்கப் பதிப்பிலுள்ள, எபிரேய வேதாகமத்தின் துணைநூல்களின் மேற்கோளாக உள்ளது. இதன் ஏழு நூல்களின் பெயர்களாவன, யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, ஞான ஆகமம், சாலமோனின் உன்னதப்பாட்டு, சீராக் என்பனவாகும். பொதுவாக அனைத்துச் சங்கீதங்களும் ஞான மரபைச் சார்ந்ததில்லை.
யூதத்தில், ஞான நூல்கள் கெட்டுவிம் அல்லது "எழுத்துகளின்” பாகமாக கருதப்படுகிறது. கிறிஸ்தவத்தில் யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, ஆகியவை பழைய ஏற்பாட்டில் உள்ளது. ஞான ஆகமம், சாலமோனின் உன்னதப்பாட்டு, சீராக் ஆகியவை
இரட்டை வரன்முறைப் பணியாக சில மரபுகளில் உள்ளது. இவை கிரேக்க மறைபொருலிலுள்ள (அபோகிரிஃபா) ஆங்கிளிகன், புரோட்டெஸ்ட்டன்ட் மொழிபெயர்ப்பிற்குள் வைக்கப்பட்டுள்ளது.
ஞான நூல்கள் பரந்த மரபான ஞான இலக்கியத்தில் உள்ளது. இது பண்டைய கிழக்கத்திய நாடுகளுக்கு அருகில் யூதம் தவிர்த்த பல மதங்களில் பரந்து காணப்படுகிறது.
எபிரேய விவிலியம் (செப்டுகின்ட்)
[தொகு]கிரேக்கச் சொல்லான சோபியா கிரேக்க வேதாகமத்தில் “ஞானம்” என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது. ஞானம் என்பது மரபு வழி ஞான நூலில் மையத் தலைப்பாக உள்ளது. ஞான நூல்களாவன,யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, ஞான ஆகமம், சாலமோனின் உன்னதப்பாட்டு, ஞான சீராக், பாருக் என்பன ஆகும்(பழைய ஏற்பாட்டில் உள்ள கடைசி மூன்று அப்போகிரிஃபாக்கள் இரட்டைவகை வரன்முறை நூல்கள் ஆகும்).
பீலோவும் உலோகோசு சொல்லும்
[தொகு]பீலோ என்பவர் அலெக்சாந்திரியாவிலுள்ள பண்டைய கிரேக்கப் பண்பாட்டு, மத எழுத்தாளராவார். இவர் யூத நூல்கள், பிளாட்டோவின் மெய்யியலை ஒத்திருக்கவைக்க முயன்றார். இவர் ஞானத்தின் பணி, செயல்கள் என்பதைக் குறிக்க கிரேக்க சொல்லான லாகோஸ், “தருக்கம்” என்று பயன்படுத்தினார். இக்கருத்து பின்பு யோவான் எழுதிய நற்செய்தியில், முதல் வசனத்தில், இயேசு கிறிஸ்து வானவரை தேவனின்(பிதா) நித்திய வார்த்தை ( லாகோஸ்) என்று குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bullock, C. Hassell (2007). An Introduction to the Old Testament Poetic Books. Moody Publishers. ISBN 978-1575674506.
- ↑ Samuel Noah Kramer (1961). Sumerian mythology: a study of spiritual and literary achievement in the third millennium B.C. Forgotten Books. pp. 72–. ISBN 978-1605060491. Retrieved 9 June 2011.
- ↑ Leo G. Perdue (1991). Wisdom in revolt: metaphorical theology in the Book of Job. Continuum International Publishing Group. pp. 79–. ISBN 978-1850752837. Retrieved 29 May 2011.
நூல்தொகை
[தொகு]- Estes, Daniel J. (2010). Handbook on the Wisdom Books and Psalms. ISBN 978-0801038884.
- Crenshaw, James L. (2010). Old Testament Wisdom: An Introduction. ISBN 978-0664234591.
- Murphy, R. E. (2002). The Tree of Life: An Exploration of Biblical Wisdom Literature. ISBN 0802839657.
Toy, Crawford Howell (1911). "Wisdom Literature". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 28.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் ஞான இலக்கியம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.