உள்ளடக்கத்துக்குச் செல்

ஞானாமிர்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞானாமிர்தம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வாகீச முனிவர் என்பவரால் எழுதப்பட்டது. சைவ சித்தாந்தக் கொள்கைகளை விளக்கும் நூல். இந்நூல் சைவ சித்தாந்த சாத்திரங்கள் அல்லது மெய்கண்ட சாத்திரங்கள் தோன்றுவதற்கு முன்பே சைவ சித்தாந்த மெய்ப்பொருளியல் கொள்கைகளை விளக்குகின்ற வகையில் எழுதப்பட்டது. [1]

இந்த நூலில் 75 அகவல் பாடல்கள் உள்ளன. அவை 4 முதல் 56 அடிகள் கொண்ட பாடல்களால் ஆனவை. சில பதிப்புகளில் விநாயகரைப் போற்றும் 2 வெண்பாக்கள் முகப்புப் பாடல்களாக அமைந்துள்ளன. பாயிரப் பாடல்களை அடுத்து இந்த நூலில் 8 பகுதிகள் உள்ளன.

  • சம்மிய ஞானம் [2]
  • சம்மிய தரிசனம் [3]
  • பாசபந்தம் [4]
  • தேகாந்தரம் [5]
  • பாசனாதித்துவம் [6] [7]
  • பாசச் சேதம் [8] [9]
  • பதி நிச்சயம் [10]
  • பாசமோசனம் [11]

என்பன அவை

பாடல்
எடுத்துக்காட்டு [12]

இருள்தீர் காட்சி அருளொடு புணர்தல்
அரும்பொறை தாங்கல், பிறர் பொருள் விழையாமை,
செய்த நன்று அறிதல், கைதவம் [13] கடிதல்,
பால் கோடாது பகலில் [14] தோன்றல்
மானம் மதாணி [15] ஆணிற் தாங்கல்
அழுக்காறு இன்மை அவாவின் தீர்தல்,
அருந்துயர் உயிர்கட்கு இருந்தகாலை
அழல் தோய்வு அன்னர் ஆகி ஆனாக் [16]
கழலும் நெஞ்சிற் கையற்று இனைதல் [17]
பன்னரும் சிறப்பின் மன்னுயிர்த் தெகைகட்கு
அறிவும் பொறியும் கழிபெருங் கவினும்
பெறற்கு அரு துறக்கம் [18] தம்மின் ஊங்கு
இறப்ப வேண்டும் என்று எண்ணரும் பெருங்குணம் [19]

கருவிநூல்

[தொகு]

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

[தொகு]
  1. சைவமரபும் மெய்ப்பொருளியலும் - பி.ஆர் நரசிம்மன் பக்கம் 78
  2. பதி, பசு, பாசம் (இறை, உயிர், உலகு) என்பன 3 அவத்தைகள்
  3. உயிருக்குச் சாங்கிரம் முதலான 5 அவத்தைகள் உண்டு
  4. ஆணவம், மறைப்பது, மாயை என்பன மூன்று பாசங்கள்
  5. வினை காரணமாகப் பிறப்பு இறப்பு நிகழும்
  6. பாச அனாதித்துவம்,
  7. பாசத்தை அறுப்பது
  8. பாசம் நிலையாமை,
  9. வினை, கன்மம், மலம் ஆகியவை உயிரைடு தொடர்பு உடையவை அல்ல.
  10. சிவன் என்பது ஆன்மா. சக்தி என்பது அனுபவிக்கும் உடல்
  11. உயிர் சிவப்பேறு அடைய வேண்டும்
  12. பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது
  13. வஞ்சகம்
  14. துலாக்கோல் போல்
  15. மன உறுதி
  16. நிலை கொள்ளாமல்
  17. வருந்துதல்
  18. வீடுபேறு
  19. கன்மம் பற்றிக் கூறும் 24 ஆம் அகவல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானாமிர்தம்&oldid=1450075" இலிருந்து மீள்விக்கப்பட்டது