ஜோ கிராவிட்சு
ஜோ கிராவிட்சு | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜோ இசபெல்லா கிராவிட்சு திசம்பர் 1, 1988 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
பெற்றோர் | லென்னி கிராவிட்ஸ்[1] லிசா போனட் |
ஜோ இசபெல்லா கிராவிட்ஸ் (English: Zoë Isabella Kravitz) (பிறப்பு: திசம்பர் 1, 1988 ) [2] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை, பாடகர் மற்றும் வடிவழகி ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டில் நோ ரிசர்வேஷன்ஸ் என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 2011 இல் வெளியான மீநாயகன் திரைப்படமான எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ்[3] என்ற படத்தில் ஏஞ்சல் சால்வடோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக டீன் சாய்ஸ் விருது மற்றும் ஸ்க்ரீம் விருதுக்கான பரிந்துரைகளைப் பெற்றார். அதை தொடர்ந்து தி டைவர்ஜென்ட் சீரிஸில் (2014-2016) கிறிஸ்டினாவாகவும், ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் திரைப்படத் தொடரில் (2016-2018) லெட்டா லெஸ்ட்ரேஞ்சாகவும் நடித்ததற்காக இவர் முக்கியமான நடிகை ஆனார்.
அதை தொடர்ந்து ஜெமினி (2017),[4] கின் (2018), கிமி (2022) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 2022 ஆம் ஆண்டு வெளியான தி பேட்மேன்[5][6] என்ற டிசி வரைகதை மீநாயகன் திரைப்படத்தில் கேட்வுமன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bonet, Kravitz Have Baby Girl 7 Lbs., Name Her Zoe". Jet (Johnson Publishing Company): p. 57. December 19, 1988. https://books.google.com/books?id=vq4DAAAAMBAJ&q=zoe+kravitz+born+venice&pg=PA57.
- ↑ "The Birth of Zoe Kravitz". California Birth Index. Retrieved June 30, 2019.
- ↑ McClintock, Pamela (August 17, 2010). "January Jones joins 'X-Men'". Variety. Archived from the original on August 5, 2011. Retrieved August 18, 2010.
- ↑ Anello, Chloe (June 10, 2016). "Zoë Kravitz Is Starring In A New Thriller Series With John Cho And Lola Kirke". Nylon. Retrieved March 16, 2017.
- ↑ Kit, Borys (October 14, 2019). "Zoe Kravitz to Star as Catwoman in 'The Batman'". The Hollywood Reporter. Retrieved October 15, 2019.
- ↑ Rubin, Rebecca (March 6, 2022). "Box Office: 'The Batman' Scores $128 Million, Second-Biggest Pandemic Debut". Variety. Retrieved March 17, 2022.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- Articles containing English-language text
- Pages using Lang-xx templates
- 1988 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- அமெரிக்கத் திரைப்பட நடிகைகள்
- அமெரிக்க தொலைக்காட்சி நடிகைகள்
- 21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்
- ஆப்பிரிக்க அமெரிக்க நடிகைகள்
- அமெரிக்க யூதர்கள்
- அமெரிக்க குரல் நடிகைகள்
- மீநாயகன் திரைப்பட நடிகர்கள்
- அமெரிக்க இசைக் கலைஞர்கள்
- ஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்