கேட்வுமன்
கேட்வுமன் | |
---|---|
![]() கேட்வுமன் | |
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | டிசி காமிக்ஸ் |
முதல் தோன்றியது | பேட்மேன் காமிக்ஸ் (1940) |
உருவாக்கப்பட்டது | பாப் கானே, பில் பிங்கர் |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | செலினா கைல் |
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள் | தி கேட், இரேன ட்ப்ரோவ்ன |
கேட்வுமன் (Catwoman) டிசி காமிக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட கற்பனையான வரைகதை பெண் மீநாயகன் கதாப்பாத்திரமாகும். எதிர்மறை கதாப்பாத்திரமாக கேட்வுமனை உருவாக்கியவர்கள் பாப் கானே மற்றும் பில் பிங்கர் ஆவர். இவர்கள் கேட்வுமன் கதாப்பாத்திரத்தினை அமெரிக்க நடிகையான ஜீன் ஹார்லோவை மாடலாக வைத்து செதுக்கியதாகக் கூறப்படுகிறது. 1940ஆம் ஆண்டு வெளிவந்த பேட்மேன் காமிக்ஸ் புத்தகத்தில் கேட்வுமன் முதன்முதலாகத் தோன்றினார்.[1][2]
கதாப்பாத்தரத்தின் இயல்பு[தொகு]
கேட்வுமன் அதிநவீன பொருட்களைப் பயன்படுத்தித் திருடுகின்ற திறமையான திருடி. அதனாலேயே பேட்மேனுக்கும் கேட்வுமனுக்குமான தொடர்பினைக் காதலென்றொ, வெறுப்பு என்றோ சொல்லமுடியாத நிலையில் வரைகலை எழுத்தாளர்கள் வைத்திருக்கின்றார்கள். பூனையைப் போல மெல்லிய நடையையும், மிக வேகமாக சுவர்களில் ஓடும் திறனும், ஆபத்துகளை முன்கூட்டியே அறிந்து செயல்படுவதுமாக கேட்வுமன் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. கேட்வுமன், முழுவதும் கதாநாயகர்களைப் போல நல்லவளாக அல்லாமல், சிறுசிறு திருட்டுகளைச் செய்வதாக இருந்தாலும், ஜோக்கர், பெங்குவின் போல கொடூரமான வில்லியாகச் சித்தரிக்கப்படவில்லை. பேட்மேனின் மீது காதல் கொள்வது போலவும், சில சமயங்களில் பேட்மேனுக்கு உதவுவது போலவும் கதைகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
உபகரணங்கள்[தொகு]
கேட்வுமனின் உபகரணங்கள் பூனையை மையமாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளன. கேட்-இல்லக் என்ற வாகனத்தினைப் பயன்படுத்துவார்.
ஆயுதங்கள்[தொகு]
பொதுவாக கேட்வுமன் அதிகம் பயன்படுத்துவது சாட்டை ஆயுதத்தினைத்தான். எதிரியின் கைகளில் துப்பாக்கிகள் இருக்கும் போது சாட்டையை இலகுவாகப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவார். பேட்மேனைப் போல சுவரைப் பற்றி ஏறுவதற்கு தனி ஆயுதத்தினை கேட்வுமன் பயன்படுத்துவதில்லை. சாட்டையையே சுவரில் ஏறவும், கட்டிடங்களைத் தாண்டவும் பயன்படுத்துகிறார்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Batman's Top 10 Love Interests". MTV News (2011-03-22). மூல முகவரியிலிருந்து 2016-04-10 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-05-01.
- ↑ Scott Beatty (2008). "Catwoman". in Dougall, Alastair. The DC Comics Encyclopedia. New York: Dorling Kindersley. பக். 74–75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7566-4119-5. இணையக் கணினி நூலக மையம்:213309017.
வெளி இணைப்புகள்[தொகு]
- Catwoman Through the Years – slideshow by Life magazine
- "Catwoman (of Batman: The Animated Series) from BatmanTAS.com". மூல முகவரியிலிருந்து March 23, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2005-11-26.
- ""Girls With Gauntlets"". மூல முகவரியிலிருந்து February 18, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-01-07. – Influence of Catwoman upon female action heroes of the 1990s
- From Comic To Pfeiffer's Cat Batman-Online.com's in-depth analysis on Tim Burton's Catwoman's comic origins
- {{cite news|last=Moore|first=Booth|title=Catching up with the original Catwoman, Julie Newmar|url=http://latimesblogs.latimes.com/alltherage/2011/01/catching-up-with-the-original-catwoman-julie-newmar.html#more%7Caccessdate=January 24, 2011|newspaper=Los Angeles