உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோ கசாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோ கசாடா
பிறப்புஜோசப் கசாடா
சனவரி 12, 1962 (1962-01-12) (அகவை 62)
நியூயார்க் நகரம்,[1] ஐக்கிய அமெரிக்கா
பணிஎழுத்தாளர், வரைகலைஞர், தொகுப்பாளர்
வாழ்க்கைத்
துணை
நான்சி கசாடா
பிள்ளைகள்1
விருதுகள்1

ஜோசப் கசாடா (ஆங்கில மொழி: Joseph Quesada) (பிறப்பு: சனவரி 12, 1962) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை புத்தக எழுத்தாளர், வரைகலைஞர் மற்றும் தொகுப்பாளர் ஆவார். இவர் டிசி வரைகதை[2] மற்றும் மார்வெல் வரைகதை ஆகியவற்றிற்காக பல புத்தகங்களில் பணியாற்றினார். 1998 இல் அவர் மார்வெல் வரைகதையின் 'மார்வெல் கிநைட்ஸ்' வரியின் ஆசிரியரானார், பின்னர் 2000 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் தலைமை தொகுப்பாசிரியர் ஆனார்.

இவர் 2010 இல் மார்வெல் என்டர்டெயின்மென்ட்டின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் மற்றும் சனவரி 2011 இல் தனது தலைமை ஆசிரியர் பதிவியில் இருந்து விலகினார், அவருக்குப் பதிலாக ஆக்செல் அலோன்சோ நியமிக்கப்பட்டார். அக்டோபர் 2019 இல் இவர் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் படைப்பாற்றல் இயக்குநராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jennings, Dana. "New York Action Hero". The New York Times. November 23, 2003. Retrieved May 28, 2009. "Mr. Quesada also falls squarely in comics' up-by-your-bootstraps, Ellis Island lineage. He grew up in Jackson Heights, Queens (Spider-Man's home borough), the comics-seduced child of Cuban immigrants."
  2. "Joe Quesada on How to Succeed as an Artist on Marvel LIVE! at San Diego Comic-Con 2016". Marvel Entertainment/YouTube. 6:56 mark. July 21, 2016. Retrieved April 2, 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_கசாடா&oldid=3322889" இலிருந்து மீள்விக்கப்பட்டது