உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேன் லூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேன் லூ
Jane Lưu
சுட்டெல்லாபேன் வியட்நாம் தொலைக்காட்சியில் ஜேன் லூ உரையாற்ருதல், ஆகத்து.3,2011
பிறப்புசூலை 1963 (அகவை 61)
சாய்கோன், வியட்நாம்
வாழிடம்இலெக்சிங்டன், மசாசூசட்
துறைவானியல், வானியற்பியல்
பணியிடங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம், MIT இலிங்கன் ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்சுட்டான்போர்டு பல்கலைக்கழகம், பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம், மசாசூசட் தொழில்நுட்ப் நிறுவனம்
ஆய்வேடுமுதனிலைச் சூரியக் குடும்ப வான்பொருள்களின் இயற்பியல் ஆய்வு (1992 [1])
ஆய்வு நெறியாளர்டேவிட் ஜெவிட்
அறியப்படுவதுகியூப்பர் பட்டைக் கண்டுபிடிப்பு
விருதுகள்வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (1991)
சா பரிசு (2012)
காவ்லி பரிசு (2012)
துணைவர்உரோன்னி ஊகர்வர்ப்
கண்டுபிடித்தசிறுகோள்கள்: 37 [2]
10370 கய்லொனோம் [A] பிப்ரவரி 27, 1995
15760 அல்பியோன் [A] ஆகத்து 20, 1992
(15809) 1994 JS[A] மே 11, 1994
(15836) 1995 DA2[A] பிப்ரவரி 24, 1995
(15874) 1996 TL66[A][B][C] அக்தோபர் 9, 1996
(15875) 1996 TP66[A][C] அக்தோபர் 11, 1996
(19308) 1996 TO66[A][C] அக்தோபர் 12, 1996
(20161) 1996 TR66[A][B][C] அக்தோபர் 8, 1996
(24952) 1997 QJ4[A][C][D] ஆகத்து 28, 1997
(24978) 1998 HJ151[A][C][E] ஏப்பிரல் 28, 1998
(26375) 1999 DE9[C] பிப்ரவரி 20, 1999
(33001) 1997 CU29[A][B][C] பிப்ரவரி 6, 1997
(59358) 1999 CL158[A][C] பிப்ரவரி 11, 1999
(60608) 2000 EE173[C][F] மார்ச்சு 3, 2000
66652 போரசிசி [A][C] செப்டம்பர் 8, 1999
79360 சிலா நுவாம் [A][B][C] பிப்ரவரி 3, 1997
(79969) 1999 CP133[A][C] பிப்ரவரி 11, 1999
(79978) 1999 CC158[A][C][G] பிப்ரவரி 15, 1999
(79983) 1999 DF9[A][C] பிப்ரவரி 20, 1999
(91554) 1999 RZ215[A][C] செப்டம்பர் 8, 1999
(118228) 1996 TQ66[A][B][C] அக்தோபர் 8, 1996
(129746) 1999 CE119[A][C] பிப்ரவரி 10, 1999
(134568) 1999 RH215[A][C] செப்டம்பர் 7, 1999
(137294) 1999 RE215[A][C] செப்டம்பர் 7, 1999
(137295) 1999 RB216[A][C] செப்டம்பர் 8, 1999
(148112) 1999 RA216[A][C] செப்டம்பர் 8, 1999
(181708) 1993 FW[A] மார்ச்சு 28, 1993
(181867) 1999 CV118[A][C] பிப்ரவரி 10, 1999
(181868) 1999 CG119[A][C] பிப்ரவரி 11, 1999
(181871) 1999 CO153[A][C] பிப்ரவரி 12, 1999
(181902) 1999 RD215[A][C] செப்டம்பர் 6, 1999
(385185) 1993 RO[A] செப்டம்பர் 14, 1993
(385201) 1999 RN215[A][C] செப்டம்பர் 7, 1999
(415720) 1999 RU215[A][C] செப்டம்பர் 7, 1999
(469306) 1999 CD158[A][C] பிப்ரவரி 10, 1999
(503858) 1998 HQ151[A][C][E] ஏப்பிரல் 28, 1998
(508770) 1995 WY2[A] 18 நவம்பர் 1995
Legend to co-discoverers:

முனைவர் ஜேன் எக்சு. லூ (Jane X. Luu) (வியட்நாம் மொழி: லூ லே ஆங் (Lưu Lệ Hằng);[3] பிறப்பு: ஜூலை 1963) அமெரிக்க-வியட்நாம் வானியலாளர் ஆவார். இவர் கியூப்பர் பட்டையையும் அதன் பெரிய வான்பொருள்களையும் கண்டுபிடித்து அவற்ரின் பான்மைகளை விளக்கியமைக்காக டேவிட் சி. யெவிட்டுடன் இணைந்து காவ்லி பரிசும் 2012 அம் ஆண்டுக்கான மிக்கெல் பிரவுன் பரிசும் பெற்றார். சூரியக் குடும்பக் கோள் அமைப்புகளின் வரலாற்றினைப் புரிந்துகொள்வதற்கான மபெரும் முன்னேற்றமாக அமைந்தது"

தொடக்கநிலை வாழ்க்கை

[தொகு]

இவர் 1963 இல் தென்வியட்நாம் அமெரிக்கப் படையின் மொழிபெயர்ப்பாளருக்கு மகளாகப் பிறந்தார்.[4] இளமையில் இவருக்கு இவரது பிரெஞ்சு மொழியைக் கற்பித்தார்; இந்நிகழ்ச்சி இவருக்கு வாழ்நாள் முழுவதும் மொழிகள்பால் ஆர்வத்தை வளர்த்தது.[5]

தென்வியட்நாமிய அரசு (சாய்கோன் வீழ்ந்ததும்) வீழ்ந்ததும் இவர் 1975 இல் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்துள்ளார். இவரும் இவரது குடும்பமும் சொந்த உறவினர் வாழ்ந்த காந்துக்கியில் கு௶இயேறி வாழ்ந்தனர். இவர் தாரைச் செலுத்த ஆய்வகத்துக்கு வந்து பார்த்தபோது இவருக்கு வானியலில் ஆர்வம் கவிந்தது.[5] She attended Stanford University, receiving her bachelor's degree in 1984.[6]

கியூப்பர் பட்டையின் கண்டுபிடிப்பு

[தொகு]

இவர் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும்[7] மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்திலும் பட்டப்படிப்பு படிக்கும்போதே டேவிட் சி. யெவிட்டுடன் இணைந்து கியூப்பர் பட்டையைக் கண்டுபிடித்துள்ளார்.[5] இருவரும் ஐந்தாண்டு நோக்கீடுகளுக்குப் பிறகு 1992 இல், புளூட்டோவையும் அதன் மிகப் பெரிய நிலாவான சாரானையும் தவிர, முதல் கியூப்பர் பட்டை வான்பொருளைக் கண்டுபிடித்தனர்; இதற்கு இவர்கள் இருவரும் அவாய்ப் பல்கலைக்கழகத்தின் மவுனா கீயில் உள்ள 2.2 மீ தொலைநோக்கியைப் பயன்படுத்தினர்.[4][8] இந்த வான்பொருள் (15760) 1992 QB1 என்பதாகும். இதற்கு இவரும் யெவிட்டும் புன்னகையாள் எனச் செல்லப் பெயரிட்டனர்.[6] அமெரிக்க வானியல் கழகம் இவருக்கு 1991 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை வழங்கியது. இவர் 1992 இல் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் அபுள் ஆய்வுநல்கையைப் பெற்றார். இவர் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை ஓம்புதல் நிறுவனமாகத் தேர்ந்தெடுத்தார். முதன்மைப் பட்டைச் சிறுகோள் 5430 லூ இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[9][10] இவர் 1992 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

தொழில்முறை வாழ்க்கை

[தொகு]

முனைவர் பட்டம் பெற்றதும், இவர் 1994 இல் இருந்து ஆர்வார்டு பல்கைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்தார்.[6] இவர் நெதர்லாந்து இலெய்டன் பல்கலைக்கழகத்திலும் பணி செய்துள்ளார்.[5] ஐரோப்பா வாழ்க்கைக்குப் பிறகு, அமெரிக்காவுக்குத் திரும்பிவந்து மசாசூசட் தொழில்நுட்பக் கழகத்தின் இலிங்கன் ஆய்வகக் கருவிகள் புலத்தில் முதுநிலை அறிவியலாளராக வேலை மேற்கொண்டு வருகிறார்.

இவரும் யெவிட்டும் 2004 திசம்பரில், 50000 குவாவோவர் எனும்பிகப் பெரிய கியூப்பர் பட்டை வான்பொருளில் படிக வடிவப் பனிக்கட்டி உள்லதாக்க் கண்டுபிடித்து அறிவித்தனர்.ரிவர்கல் அதில் அம்மோவியா நீரகவேற்று இருப்பதற்கான நிலமைகளையும் கண்டுள்ளனர். இவர்கள் இந்த பனிக்கட்டி தரையடியில் தோன்றி, சில மில்லியன் ஆண்டுகட்கு முன்னர் மற்றொரு கியூப்பர் பட்டை வான்பொருளோடு மோதும்போது வெளியேறி இருக்கலாம் என்ற கோட்பாட்டையும் வெளியிட்டனர்.[11]

இவரும் யெவிட்டும் இணைந்து 2012 இல் இலாசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இழ்சா பரிசைப் பெற்றனர். "இப்பரிசு இவர்கள் இருவரும் நெப்டியூன் கடப்பு வான்பொருள்களைக் கண்டுபிடித்து அவற்றின் பான்மைகளையும் விவரித்தமைக்காக வழங்கப்பட்டது. இந்த நெப்டியூன் வான்பொருள்கள் சூரியனின் உருவாக்கம் சார்ந்த தொல்பொருள்களும் நெங்கலமாகத் தேடிக்கொண்டிருந்த சிற்றலைவுநேர வால்வெள்ளிகளுக்கான வாயிலும் ஆகும்." [12] இவர் காவ்லி பரிசை யெவிட், மைக்கேல் ஈ. பிரவுன் ஆகிய இருவருடனும் பெற்றார். "இப்பரிசு இவர்கள் மூவரும் கியூப்ப பட்டையையும் அதன் மிகப் பெரிய வான்பொருள்களையும் கண்டுபிடித்து அவற்றின் பான்மைகளை விவரித்தமைக்காக வழங்கப்பட்டது. இது நம் சூர்யக் குடும்பக் கோள்கள் அமைப்பின் வரலாற்றைப் புரிந்துகொள்வதைப் பெரிதும் மேம்படுத்திட வழிவகுத்தது”.[13]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் பயணத்தை விரும்புபவர். நேப்பாவில் இவர் குழந்தைகளைக் காப்போம் அமைப்பில் பணிபுரிந்துள்ளார்.[சான்று தேவை] இவர் பலவகைக் களச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்னிவர் செல்லோ விளையடுவார். இவர் தன் கணவராகிய வானியலாளர் உரோன்னி ஊகர்வர்ப்பை நெதெர்லாந்து இலெய்டனில் சந்தித்தார்.[5]

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]
  • 1991 வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது
  • 2012 வானியலுக்கான சா பரிசு (Shaw Prize) [14]
  • 2012 வானியற்பியலுக்கான காவ்லி பரிசு [15]
  • சிறுகோள் 5430 லூ 1996 ஜூலை 1 இல் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது (சி.கோ.சு. 27459).[9][16]
  • இவர் நார்வே அறிவியல், எழுத்துக் கல்விக்கழக ஆய்வுறுப்பினர் ஆவார்.[17]

சில வெளியீடுகள்

[தொகு]
  • Luu, Jane; D.C. Jewitt (1998). "Deep Imaging of the Kuiper Belt with the Keck 10-Meter Telescope". Astrophysical Journal 502: L91–L94. doi:10.1086/311490. Bibcode: 1998ApJ...502L..91L. 
  • Luu, Jane; B. Marsden; D.C. Jewitt; C. Trujillo; C. Hegenrother; J. Chen; W. Offutt (1997). "A New Dynamical Class of Object in the Outer Solar System". Nature 387 (6633): 573. doi:10.1038/42413. Bibcode: 1997Natur.387..573L. 
  • Luu, Jane; D.C. Jewitt (1996). "Color Diversity among the Centaurs and Kuiper Belt Objects". Astronomical Journal 112: 2310–2318. doi:10.1086/118184. Bibcode: 1996AJ....112.2310L. 

மேற்கோள்கள்

[தொகு]
  1. Graduate Student Advisees by David Jewitt
  2. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 August 2016. பார்க்கப்பட்ட நாள் 25 August 2016.
  3. Hữu Thiện, Jane Lưu lên núi ngắm sao..., Vietnamnet, 2004
  4. 4.0 4.1 Bartusiak, Marcia (February 1996). "The Remarkable Odyssey of Jane Luu". Astronomy 24: 46. Bibcode: 1996Ast....24...46B. http://www.marciabartusiak.com/uploads/8/5/8/9/8589314/odyssey_of_jane_luu.pdf.  Autobiography of Jane Luu பரணிடப்பட்டது 2015-09-28 at the வந்தவழி இயந்திரம் 17 September 2012
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 An Interview With...Jane Luu, 21 March 2003
  6. 6.0 6.1 6.2 May/June 1998 Feature Alum, Jane Luu, '84. CLASS NOTABLE: JANE LUU, '84, Scoping the Cosmos பரணிடப்பட்டது 2008-09-07 at the வந்தவழி இயந்திரம் By Erika Check, '99
  7. The Kuiper Belt Michael E. Brown, Physics Today, எஆசு:10.1063/1.1752422
  8. University of Hawaii 2.2-meter telescope - Public Information Richard J. Wainscoat
  9. 9.0 9.1 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (5430) Luu. Springer Berlin Heidelberg. p. 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016.
  10. Marquis Who's Who. 2006.
  11. Chang, Kenneth (December 9, 2004). "Astronomers Entertain Visions of Icy Volcanoes in Faraway Places". த நியூயார்க் டைம்ஸ். pp. A33. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9406EFD71331F93AA35751C1A9629C8B63. 
  12. The 2012 Shaw Prize
  13. Dresselhaus, Graybiel, Luu receive 2012 Kavli Prizes - MIT News Office
  14. The Shaw Prize in Astronomy 2012 பரணிடப்பட்டது 2017-10-20 at the வந்தவழி இயந்திரம் 29 May 2012
  15. "Kavli Prize 2012". Archived from the original on 2017-07-22. பார்க்கப்பட்ட நாள் 2018-06-22.
  16. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016.
  17. "Gruppe 2: Astronomi, fysikk og geofysikk" (in Norwegian). Norwegian Academy of Science and Letters. Archived from the original on 27 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 26 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜேன் லூ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேன்_லூ&oldid=3961079" இலிருந்து மீள்விக்கப்பட்டது