ஜேன் கோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேன் கோம்
தாய்மொழியில் பெயர்Ян Кум
பிறப்புபெப்ரவரி 24, 1976 (1976-02-24) (அகவை 45)
கீவ், உக்ரைன் எஸ்எஸ்ஆர், சோவியத் ஒன்றியம்
குடியுரிமைஅமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்சான் ஓசே பல்கலைக்கழகம் (dropped out)
பணிவாட்சாப் தலைமை நிர்வாக அதிகாரி & பேசுபுக் நிர்வாக இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2009 - தற்போது வரை
அமைப்பு(கள்)வாட்சாப் இங்
அறியப்படுவதுவாட்சப் துணை உருவாக்குனர்
சொந்த ஊர்பாசுடிவ், உக்ரைன்
சொத்து மதிப்புGreen Arrow Up Darker.svg US$9.7 பில்லியன் (மே 2016)[1]

ஜேன் கோம் ( Jan Koum 24 பிப்பிரவரி 1976) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த கணினி நிரலரும் இணைய புதுப் புனைவரும் ஆவார்.[2] வாட்சப் என்னும் செய்தி பரிமாற்ற செயலியைப் பிரையன் ஆக்டனுடன் இணைந்து உருவாக்கியவர். வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து 2014 இல் கையகப்படுத்தினர்.

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

ஜேன் கோம் உக்ரைனில் ஒரு யூத ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்.[3] தாம் 16 அகவையில் இருக்கும்போது கோம் தம் தாயுடன் உக்ரைனிலிருந்து அமெரிக்காவில் குடியேறினார். வறுமையின் காரணமாக வணிகக் கடைகளில் தரையைத் துப்புரவு செய்யும் வேலையைச் செய்தார். வறுமையில் உழலும் ஏழைகளுக்கு வழங்கப்படும் சலுகை உணவுப் பொருள்களைப் பெற்று வாழ்ந்தார். யாகூ குழுமத்தில் ஒன்பது ஆண்டுகள் பணி செய்தார். தமது 18 ஆம் அகவையில் கணினி நிரலாக்கம் செயவதில் ஆர்வம் காட்டினார்  சான் ஜோஸ் மாநில பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார்.

எர்னஸ்ட் அண்ட் யங் என்ற குழுமத்தில் பணியாற்றிய போது, பிரியன் ஆக்டன் என்பவரைச் சந்தித்து இருவரும் நண்பர்கள் ஆனார்கள். யாகூ குழுமத்திலிருந்து இருவரும் விலகி தென் அமெரிக்காவில் ஓராண்டு பயணம் செய்தார்கள். முகநூல் குழுமத்தில் பணியில் இணைய இருவரும் விண்ணப்பம் செய்தனர். ஆனால் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை  அதன் பின்னர் 2009 சனவரியில் கோம் ஐபோன் ஒன்று வாங்கினார். அந்நிகழ்ச்சி வாட்சப் தொடங்குவதற்கான எண்ணத்தையும் திட்டத்தையும் வகுக்க ஏதுவாக அமைந்தது. 2009 பிப்பிரவரியில்  கலிபோர்னியாவில்  ஜென் கோம் தம் நண்பர் பிரியன் ஆக்டனுடன் இணைந்து வாட்சப் குழுமத்தைத் தொடங்கினார்.

வாட்சப் மற்றும் முகநூல்[தொகு]

வாட்சப் குறுகிய காலத்தில் உலக  மக்களிடையே விரைவாகப் பயன்பாட்டுக்கு வந்ததைக் கவனித்த முக நூல் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க், ஜேன் கோமை 2012 ஆம் ஆண்டில் சந்தித்தார். பல சந்திப்புகளுக்குப் பிறகு 19 பில்லியன் டாலர் விலைக்கு வாட்சப் பங்குகளை வாங்குவதாக முக நூல் அறிவித்தது.[4][5][6][7][8]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேன்_கோம்&oldid=3113691" இருந்து மீள்விக்கப்பட்டது