ஜெ. பிரபாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெ. பிரபாகர்
பிறப்புஅகவை 58
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ஜெ.பி (J.P)
அறியப்படுவதுஓவியர், சமூக செயற்பாட்டாளர், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்

ஜெ. பிரபாகர் எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனர், ஓவியர், சமூக ஆர்வலர் மற்றும் செயற்பாட்டாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் ’அசோக் லிலேண்ட்’[1] இல் பணிபுரிந்தவர். ஓவியர்கள் வட்டத்தில் ஜெ. பி (J. P) என்று சுருக்கமாக அறியப்படுபவர்.

செயற்பாடுகள்[தொகு]

பிரபாகர் அசோக் லிலேண்டில் பணிபுரிந்த காலத்தில், 1980 இலிருந்து 1995 வரையான சமயத்தில் பல சமுக திட்டங்களை நிறுவனத்திலிருந்து செயல்படுத்தும் ’நல்லோர் வட்டம்’ என்ற அமைப்பை ஒருங்கிணைத்தவர்.

சமூக சேவையில் 1985 இலிருந்து ஈடுபட்டு வருகிறார். சென்னையைச் சுற்றியுள்ள கிராம மக்களைச் சந்தித்து குடிப்பழக்கத்தின் தீமைகளை எடுத்துரைத்து நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அக்டோபர் 02, 2005 ஆம் ஆண்டு நூறு சிறிய தன்னார்வ நிறுவனங்களை ’எண்ணங்களின் சங்கமம்’[2] என்ற தலைப்பில் ஒன்று திரட்ட ஆரம்பித்து, ஆண்டிற்கு 100 தன்னார்வ நிறுவனங்களைப் புதிதாக ஒருங்கிணைக்கும் குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறார்.[3]

அரசியலில்[தொகு]

ஆம் ஆத்மி கட்சி சார்பாக 2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு 19553 வாக்குகள் பெற்றார்.[4].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜெ. பிரபாகர் ஆம் ஆத்மி கட்சி தளத்தில்". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 3, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "எண்ணங்களின் சங்கமம்". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 3, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. http://www.action2020.in/2012/10/j-prabhakar-brought-700-plus-small-ngos.html
  4. http://elections.tn.gov.in/GETNLS2014/Votes%20Polled%20-%20GELS2014/PC04.jpg[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._பிரபாகர்&oldid=3272791" இலிருந்து மீள்விக்கப்பட்டது