ஜெஸ்வின் ஆல்ட்ரின்
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | திசம்பர் 24, 2001 முதலூர், தமிழ்நாடு[1] |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | நீளம் தாண்டுதல் |
பயிற்றுவித்தது | யோந்த்ரி பெட்டான்சோஸ் |
சாதனைகளும் விருதுகளும் | |
தனிப்பட்ட சாதனை(கள்) | 8.42 NR at Indian Open Jumps Competition 2023 in பெல்லாரி, கருநாடகம்[2] |
பதக்கத் தகவல்கள் |
ஜெஸ்வின் ஆல்ட்ரின் (Jeswin Aldrin) என்பவர் ஒரு இந்திய நீளம் தாண்டுதல் வீரர் ஆவார். இவர் நீளம் தாண்டுதலில் 8.42 மீட்டர் நீளம் தாண்டி தேசிய சாதனை படைத்துள்ளார். [3]
தனிப்பட்ட தகவல்
[தொகு]இவர் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது பெற்றோர் ஜான்சன் ஐசக், எஸ்தர் செல்வ ராணி ஆகியோராவர். [4] இவருக்கு ஜெர்வின் ஐசக், ஜாய்வின் ஜோசப் ஆகிய இரு தம்பிகளும், அட்ரியானா எஸ்கேஐ என்ற அக்காளும், ஃபிரான்சினா எஸ்கேஐ என்னும் தங்கையும் உண்டு.
தொழில்
[தொகு]இவர் 2022 உலக தடகள வாகையருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தகுதி பெற்றார். ஆனால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறினார். [5] [6] ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.42 மீட்டர் தாண்டி குதித்து தேசிய சாதனை படைத்துள்ளார். [7] [8] 2023 துவக்கத்தில் ஆசிய உள்ளரங்கத் தடகள வாகையர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். 2023 மார்ச்சில் பெல்லாரியில் நடைபெற்ற இரண்டாவது இந்திய ஓபன் ஜான்ஸ் தொடர் நீளம் தாண்டுதலில் என். சிறீசங்கரிடமிருந்து தேசிய சாதனையைத் தன்வசப்படுத்தினார். [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A village of churches, halwa and the next big hope in Indian athletics, long jumper Jeswin Aldrin", Indian Express
- ↑ "Jeswin Aldrin breaks National record and makes cut to the coming Asian Games", olympic.com
- ↑ "21-year-old Jeswin Aldrin shatters long jump national record with world leading distance". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ "Long Read: A village of churches, halwa and the next big hope in Indian athletics, long jumper Jeswin Aldrin". The Indian Express. 2022-04-16. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ M, Hari Kishore. ""I am happy to qualify for the World Championships" - Long jumper Jeswin Aldrin". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ Sportstar, Team (2022-10-01). "Jeswin Aldrin qualifies for long jump World Championships at National Games". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ Singh, Navneet. "Jeswin Aldrin's massive leap earns him a national record in men's long jump". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ "Jeswin Aldrin broke national record". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ "முத்து நகரின் தடகளச் சொத்து!". Hindu Tamil Thisai. 2023-03-28. பார்க்கப்பட்ட நாள் 2023-06-01.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் ஜெஸ்வின் ஆல்ட்ரின்-இன் குறிப்புப் பக்கம்