ஜெயா தியாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயா தியாகராஜன்
18-26 திசம்பர் 2011க்கு இடையில் புது தில்லியில் நடைபெற்ற கண்காட்சியில் எடுக்கப்பட்ட படம்
பிறப்புஜெயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி
(1956-12-29)29 திசம்பர் 1956
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பாணிதஞ்சாவூர்

ஜெயா தியாகராஜன் (Jaya Thyagarajan) என்பர் இந்தியாவினைச் சார்ந்த ஓவியர் ஆவார். இவர் 1956-இல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரில் பிறந்தார். தஞ்சை ஓவியங்களுக்காகக் குறிப்பிடப்பட்ட ஒரு பாரம்பரிய இந்தியக் கலைஞர் ஆவார்.[1][2][3] இந்த ஓவியங்கள் தோன்றிய சென்னை மாநிலத்தில் (தமிழ்நாடு) ஜெயா பிறந்தார்.

கல்வி[தொகு]

1976-இல் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, 1978-இல் இந்தியத் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, துறைத் தலைவர் சிறீ கே. சிறீனிவாசுலுவின் வழிகாட்டுதலின் கீழ் சென்னையிலுள்ள கலாசேத்ரா நுண்கலைப் பள்ளியில் நுண்கலைகளில் பட்டயம் பெற்றார்.

ஜெயா தஞ்சை ஓவியங்களை வரைவதில் தீவிரப் பற்றுள்ளவராக இருந்து வருகிறார். மேலும் இவரது பல்வேறு கண்காட்சிகள் தஞ்சை ஓவியங்களின் தலைசிறந்த படைப்புகளின் பிரதிகளாகும்.

கண்காட்சிகள்[தொகு]

ஜெயா தியாகராஜன் (வலதுபுறம்) கான்சல் ஜெனரல் திரு. பிரபு தயாள் மற்றும் தூதுவர் பிலிப் டால்போட் ஆகியோருடன் நியூயார்க்கில் ஏப்ரல் 2009-இல் ஏசியா முன்முயற்சிகள் தொடங்கப்பட்டது.

இவரது முதல் கண்காட்சி 1980-இல் கலாசேத்திரா பள்ளியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 1981-இல் ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மே 1992 மற்றும் ஆகத்து 1993-இல் புது தில்லியில் உள்ள மேக்ஸ் முல்லர் பவனிலும், திரிவேணி கலைக்கூடத்திலும் இரண்டு கண்காட்சிகளை நடத்தினார். 1986-இல் புது தில்லி லலித் கலா அகாதமி நடத்திய கலா-மேளாவில் நடத்தினார்.

1989 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் அகில இந்திய நுண்கலை மற்றும் கைவினை சங்கம் நடத்திய பாரம்பரிய கலை கண்காட்சிக்கு ஜெயாவின் ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவரது படைப்புகள் சனவரி மற்றும் சூன் 1992 மற்றும் அக்டோபர் 1993-இல் பூம்புகார், தமிழ்நாடு கலைக்கூடம், புது தில்லி நடத்திய கண்காட்சிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அக்டோபர் 1995-இல் இலண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் நேரு மையம், புனித டெனிசு நகராட்சி, ரீயூனியன், இந்திரா காந்தி கலை மற்றும் கலாச்சார மையம், மொரீசியசு (ஏப்ரல் 1997) மற்றும் ஏஎன்இசட் கிரைண்ட்லேஸ் வங்கி, புது தில்லி ஆகியவற்றிலும் ஜெயா தனது படைப்புகளின் கண்காட்சியை நடத்தினார். அக்டோபர் 1997,1998-இல். 2002ஆம் ஆண்டு வாசிங்டன் டி. சி.யில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஜெயா தனது படைப்புகளின் கண்காட்சியை நடத்தினார். 2006-இல் செய்ப்பூரில் உள்ள ஜவகர் கலா கேந்திராவில் தனது ஓவியங்களின் கண்காட்சியையும் நடத்தினார்.

ஜெயா சமீபத்தில் அமெரிக்காவில் ஆசியா முன்முயற்சிகளின் தொடக்க விழாவில், ஆசியா முன்முயற்சிகளுடன் இணைந்து, தஞ்சை ஓவியங்களின் படைப்புகளை நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காட்சிப்படுத்தினார்.

இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள பல வீடுகள் மற்றும் பெருநிறுவன அலுவலகங்களில் ஜெயாவின் படைப்புகள் இன்று பெருமைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to Embassy of India, Washington D C, USA" (PDF). Indianembassy.org. பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
  2. "Press Releases-Consulate General of India, New York, U.S.A. - indiacgny.org - www.indiacgny.org". Archived from the original on 19 சூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 12 மே 2009.
  3. "Museums Openings". Washington Post: p. T62. 22 February 2002 இம் மூலத்தில் இருந்து 5 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105104414/http://pqasb.pqarchiver.com/washingtonpost/access/109579857.html?dids=109579857:109579857&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Feb+22,+2002&author=&pub=The+Washington+Post&desc=Museums+OpeningsHIRSHHORN+--+...&pqatl=google. பார்த்த நாள்: 28 January 2011. "...Tanjore paintings by Jaya Thyagarajan through Tuesday...." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயா_தியாகராஜன்&oldid=3894504" இலிருந்து மீள்விக்கப்பட்டது