ஜெயலட்சுமி சீதாபுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி சீதாபுரா மைசூர் பல்கலைக்கழகத்தில்
ஜெயலட்சுமி சீதாபுரா மைசூர் பல்கலைக்கழகத்தில்
புனைபெயர்ஜெயலட்சுமி சீதாபுரா
வகைநாட்டுப்புற இசை, நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப்புற மருத்துவம், நாட்டுப்புற கலைகள் மற்றும் கலாச்சார ஆய்வுகள்

ஜெயலட்சுமி சீதாபுரா (ஆங்கிலம்: Jayalakshmi Seethapura; கன்னடம்: ಡಾ. ಜಯಲಕ್ಷ್ಮಿ ಸೀತಾಪುರ) என்பவர் கன்னட மொழியில் எழுதும் நவீன இந்தியாவின் புகழ்பெற்ற நாட்டுப்புறவியலாளர்களில் ஒருவர்.[1] சீதாபுரா மைசூர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயலட்சுமி நூற்றுக்கணக்கான மாநில மற்றும் தேசிய அளவிலான கலாச்சாரப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்றுள்ளார். நாட்டுப்புறவியல் பற்றிய இவரது புத்தகங்கள் கர்நாடக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஜெயலட்சுமி நாட்டுப்புறவியல் குறித்து 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க சில: "நம்ம சுத்தின ஜனபத கதைன கீதேகள்" ('கர்நாடக ஜனபதா மற்றும் யக்ஷகானா அகாதமி வெளியீடு),[2] "ஹக்கி ஹரியாவே கிடடகா", "ஜானபத ஹட்டி", "கல்யாணவெண்ணி ஜனரெல்லா" (கன்னட இலக்கிய மன்றத்தால் வெளியிடப்பட்டது).[3] கர்நாடகாவின் நாட்டுப்புறவியல் மற்றும் நாட்டுப்புற இலக்கியம் குறித்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சீதாபுரா 2016-ல் கர்நாடக ஜனபதா அகாதமி விருதையும் பெற்றார்.[4]

புத்தகங்கள்[தொகு]

ஜெயலட்சுமி 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவை பெரும்பாலும் நாட்டுப்புறவியல் மற்றும் கலாச்சார ஆய்வுகள் தொடர்பானது. இவற்றில் சில:

  • ஹக்கி ஹார்யவே கிடடகா [5]
  • கல்யாணவெண்ணி ஜனரெல்லா
  • ஜானபதா ஹட்டி
  • நம்ம சுட்டின ஜனபத கதனகீதேகள்

விருதுகள்[தொகு]

  • 2017 - ‛6வது பாண்டவபுரா வட்ட கன்னட சாகித்ய சம்மேளனாவில்' [1] தலைமை வகித்தார்.
  • 2016 - ‛முனைவர் ஜீஷம்பா விருது, ஜனபதா அகாதமியின்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Pandavapura Kannada Sahitya Sammelana". www.prajavani. 23 Jun 2017.
  2. "Sapnaonline:Search Page". www.sapnaonline.com.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Jayalakshmi Seethapura". www.marymartin.com. Archived from the original on 2017-11-15. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
  4. "Janapada Academy Awards to be given away tomorrow". 9 January 2016 – via www.thehindu.com.
  5. "RIEMysore catalogue". RIEMysore.
  6. "Janapada Academy Awards to be given away tomorrow". 9 January 2016 – via www.thehindu.com.
  7. "Janapada Awards announced". www.kannadaprabha.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயலட்சுமி_சீதாபுரா&oldid=3651578" இலிருந்து மீள்விக்கப்பட்டது