ஜெயபிரபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயபிரபா (Jayaprabha)(பிறப்பு 1957) என்பவர் இந்திய விமர்சகர் மற்றும் தெலுங்கு கவிஞர் ஆவார். இவர் தெலுங்கு இலக்கிய விமர்சனம் மற்றும் கவிதைகளில் பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.[1] ஜெயப்பிரபாவின் கவிதைகள் பெண்களின் பிரச்சினைகள் மற்றும் பலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இவரது கவிதைகள் ஆண் ஆதிக்கத்திற்கு எதிரானது.

வாழ்க்கை[தொகு]

ஜெயபிரபா 29 சூலை 1957-ல் பிறந்தார். தெலுங்கு இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று முனைவர் பட்டமும் பெற்றார். தெலுங்கு நாடகத்தின் முன்னேற்றம் மற்றும் நிலை குறித்த ஆய்வறிக்கைக்காக உசுமானியா பல்கலைக்கழகத்தில் வழங்கினார்.[2] தற்போது சிக்கந்தராபாத்தில் வசிக்கிறார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

1981ஆம் ஆண்டு ஜெயபிரபாவும் கே. சத்யவதியும் இணைந்து உலோகிதா என்ற பெண்ணிய மாத இதழைத் தொடங்கினார்கள். இவரது முதல் கவிதைத் தொகுப்பு "யுத்தோன்முகம்கா" (போரை நோக்கி) [3] 1984-ல் வெளியிடப்பட்டது.

ஜெயபிரபாவின் இரண்டாவது கவிதை நூல் "வாமனுடி மூடோ பாடம்" (வாமன மூன்றாம் பாதம்) 1988-ல் வெளிவந்தது. இந்தத் தொகுப்பில் இவரது இரண்டு முக்கிய பெண்ணியக் கவிதைகளான 'சுப்புலு' (பார்வைகள்) மற்றும் 'பிதானி தகலெய்யாலி' (சேலையை எரியுங்கள்) ஆகியவை இடம்பெற்றன. சுப்புலு 'தோற்றம்' அல்லது சில சமயங்களில் 'பார்வை' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவிஞன்-ஆளுமை பெண்கள் தினமும் தாங்கும் தாக்குதலை விவரிப்பதில் தொடங்கி, பெண்கள் பார்வையைத் திருப்பி, பொது இடங்களைத் தனக்காக மீட்டெடுக்கும் நாள் குறித்த கவிஞர் நம்பிக்கையுடன் முடிவடைகிறது. 'பிதானி தகலெயலி'யில் (சேலையை எரியுங்கள்) ஜெயபிரபா, பாரம்பரிய பாலின விதிமுறைகளுக்கு உறுதியுடன் புடவையைச் சமன் செய்து, பாரம்பரிய பாலின விதிமுறைகளிலிருந்து விடுபட, பெண்கள் சேலையைக் கைவிட வேண்டும் என்று கூறுகிறார்.[4]

1988ஆம் ஆண்டு ஜெயபிரபா "பாவா கவித்வம்லோ ஸ்த்ரி" என்ற தெலுங்கு காதல் கவிதையில் பெண்கள் மீதான விமர்சனத்தை வெளியிட்டார். முக்கியமாக ஆண் கவிஞர்களின் படைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை இந்தத் தொகுப்பு ஆய்வு விமர்சித்தது. தெலுங்கு இலக்கியத்தின் மீதான பெண்ணிய விமர்சனத்தின் முன்னோடிப் படைப்பாகக் கருதப்படும் இது சர்ச்சையையும் பாராட்டுகளையும் பெற்றது. பெங்களூருப் பல்கலைக்கழகத்தில் இக்கவிதைத் தொகுப்பு பாடமாகப் பரிந்துரைக்கப்பட்டது. [5]

1991-ல் ஜெயபிரவாவின் மற்றொரு கவிதைத் தொகுப்பு "இக்கடா குறிசினா வர்ஷம், எக்கடி மேகநிதி?" (இங்கே மழை பெய்தது, ஆனால் எங்கிருந்து - மேகம்?) வெளியிடப்பட்டது.[6] இவர் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையின் மறுபதிப்பையும் வெளியிட்டார். இதே ஆண்டில் தெலுங்கு நாடகம் குறித்த "நாலுகோ கோதா" (நான்காவது சுவர்) ஆய்வறிக்கையினையும் வெளியிட்டார்.

"எதிர்பாராத பாசம் மற்றும் பிற கவிதைகள்" 2005-ல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி. வி.நரசிம்ம ராவ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இவரது தெலுங்கு காதல் கவிதைகளின் தேர்வு இதில் உள்ளது.[7]

ஜெயபிரபாவின் கவிதைகள் பல தேசிய மற்றும் பன்னாட்டுத் தொகுப்புகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.[8]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

கவிதை[தொகு]

  • யுத்தோன்முகம்கா (Yuddhonmukhamga)(1984)
  • வாமனுடி மூடி பாடம் (Vaamanudi Moodo Paadam)1988)
  • இக்காட் குர்சினி வர்ஷம், எக்கடி மகநிதி (Ikkad Kursini Varsham, Ekkadi Maghanidi)(1991)
  • எதிர்பாராத பாசம் மற்றும் பிற கவிதைகள் (Unforeseen Affection And Other Poems)(2005)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poets translating Poets - Poets - Goethe-Institut". www.goethe.de. பார்க்கப்பட்ட நாள் 2016-10-08.
  2. "jayaprabha". tramesh.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-08.
  3. Tharu, Susie J.; Lalita, Ke (1993-01-01) (in en). Women Writing in India: The twentieth century. Feminist Press at CUNY. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781558610293. https://books.google.com/books?id=OjZYf9Xf9bcC&dq=jayaprabha+poet&pg=PA596. 
  4. Bonnie, Zare; Afsar, Mohammed (2012-04-01). "Burn the Sari or Save the Sari? Dress as a Form of Action in Two Feminist Poems". ARIEL 43 (2). பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-1327. https://www.questia.com/library/journal/1G1-335189784/burn-the-sari-or-save-the-sari-dress-as-a-form-of. 
  5. Tharu, Susie J.; Lalita, Ke (1993-01-01) (in en). Women Writing in India: The twentieth century. Feminist Press at CUNY. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781558610293. https://books.google.com/books?id=OjZYf9Xf9bcC&dq=jayaprabha+poet&pg=PA596. 
  6. OpenLibrary.org. "Jayaprabha". Open Library. பார்க்கப்பட்ட நாள் 2016-10-08.
  7. "The Daily Star Web Edition Vol. 5 Num 575".
  8. "Poets translating Poets - Poets - Goethe-Institut". www.goethe.de. பார்க்கப்பட்ட நாள் 2016-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயபிரபா&oldid=3684091" இலிருந்து மீள்விக்கப்பட்டது