ஜெயசிறீ இராமதாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயசிறீ இராமதாசு
பிறப்பு1954 (அகவை 69–70)
மும்பை, இந்தியா
துறைஅறிவியல் கல்வி
பணியிடங்கள்ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம்m, டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம், மும்பை
கல்வி கற்ற இடங்கள்பெர்க்குசன் கல்லூரி, இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர், புனே பல்கலைக்கழகம்

ஜெயசிறீ இராமதாசு (Jayashree Ramadas) ஓர் இந்தியக் கல்வியாளர். இவர் இந்தியாவின் மும்பையில் உள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய மையமான ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தின் இயக்குநராக (2011–2016) இருந்தார்.[1] ஒரு பேராசிரியராக இவர் அறிவாற்றல் மற்றும் அறிவியல் கல்வி தொடர்பான பட்டதாரி படிப்புகளுக்கான கல்வியினை கற்பிக்கிறார். இவர் பயன்பாட்டு இயற்பியல் பன்னாடு ஒன்றியம்[2] மற்றும் இயற்பியல் கல்விக்கான பன்னாட்டுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[3] நவம்பர், 2008ல், எச். பி. சி. எஸ். இ., புலத்தலைவராக நியமிக்கப்பட்ட இராமதாசு, சூன் 2011ல், மைய இயக்குநராக நியமிக்கப்பட்டார். iஇவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள பாடங்களுக்கிடையேயான கல்வி மையத்தில் பேராசிரியராக உள்ளார்.[4]

இளமை[தொகு]

ஜெயசிறீ இராமதாசு 1954-இல் பம்பாயில் (இப்போது மும்பை) பிறந்தார். இவரது தந்தை தொலைத்தொடர்பு பொறியாளர். இவரது ஆரம்பப் பள்ளிப் படிப்பு தில்லியில் உள்ள தூய தோமசு பள்ளியிலிருந்தது. இதைத் தொடர்ந்து இவர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் ஒரு வருடம் படித்தார். மேலும் புனேவில் உள்ள தூய எலினா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் புனேவில் உள்ள பெர்க்குசன் கல்லூரியில் பயின்றார். மேலும் 1976-இல் கான்பூர், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மும்பையில் உள்ள ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் முனைவர் பட்ட ஆய்வினை முடித்த இவருக்கு புனே பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. இந்தியாவில் அறிவியல் கல்வி பற்றிய முதல் ஆய்வறிக்கை இவருடையது எனலாம்.[5]

தொழில்[தொகு]

ஜெயசிறீ லீட்சு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட பின் ஆய்வினை முடித்தார். இதன் பின்னர் மும்பையில் உள்ள ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். ஜெயசிறீ மும்பையில் உள்ள ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் இவருடைய வாழ்க்கையின் பெரும்பகுதியினைக் கழித்தார். ஆகத்து 2007-இல் முழுப் பேராசிரியராகவும், நவம்பர் 2008-இல் புலத்தலைவராகவும் ஆனார். சூன் 2011-இல் இவர் எச். சி. பிரதான் இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும், இம்மைய நான்காவது இயக்குநராகப் பொறுப்பேற்றார், இப்பதவியில் இவர் ஐந்தாண்டுக் காலத்திற்கு நியமிக்கப்பட்டார். மேலும் டப்ட்சு பல்கலைக்கழகம் மற்றும் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் தலா ஒரு வருடம் கழித்தார்.

சனவரி 2017-இல், இராமதாசு ஐதராபாத்தில் உள்ள டாட்டா அடிப்படை ஆய்வு மையத்தின் துறையிடைக் கல்வி மையத்தில் தனது பணியினைத் தொடர்ந்தார்.

விருது/உதவித்தொகை[தொகு]

  • 1971–1981 தேசிய அறிவியல் திறமை தேடல் உதவித்தொகை
  • 2011 வளரும் நாடுகளில் அறிவியலின் முன்னேற்றத்திற்கான உலக அறிவியல் அகாதமி பரிசு "விஞ்ஞான கல்விப் பொருள் மேம்பாட்டிற்காக" [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Homi Bhabha Centre for Science Education – Tata Institute of Fundamental Research Faculty". Homi Bhabha Centre for Science Education. Archived from the original on 5 December 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  2. "International Union of Pure and Applied Physics – C14: MEMBERS". International Union of Pure and Applied Physics. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  3. "International Committee on Physics Education – Members of the Commission". Archived from the original on 9 December 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  4. "Faculty – TIFR Hyderabad". tifrh.res.in. Tata Institute of Fundamental Research. பார்க்கப்பட்ட நாள் 25 January 2018.
  5. Ramadas, Jayashree. "Building a new discipline" (PDF). ias.ac.in. Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 4 February 2018.
  6. "TWAS Regional Prizes 2011". பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயசிறீ_இராமதாசு&oldid=3898559" இலிருந்து மீள்விக்கப்பட்டது