ஜெனிபர் எசுபெடியாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெனிபர் ஆன் எசுபெடியாக்கி (Jennifer Ann Spediacci) (பிறப்பு: 1978 ஏப்ரல் 5) இவர் ஓர் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்ககுடிமகனாவார். இவர், ஆல்-அமெரிக்கா அணி என்ற ஒரு தொழில்முறை வீரர்களைக் கொண்ட ஒரு கற்பனையான அமெரிக்க விளையாட்டுக் குழுவின் உறுப்பினராக இருந்தார். மேலும், 2004இல் நடைபெற்ற ஒலிம்பிக் விளயாட்டுகளில் வலது கை மென்பந்தாட்ட வீரராவார். முதலில் கலிபோர்னியாவின் பிரீமாண்டில் இருந்து விளையாட ஆரம்பித்தார். இவர் 1997-00 முதல் பேக் -12 விளையாட்டுப் போட்டிகளில் வாசிங்டன் அசுகீசின் மாணவர் ஆணியில் வீரராக இருந்தார். நான்கு மகளிர் கல்லூரி உலகத் தொடர்களில் போட்டியிட்டு பள்ளி அளவில் சாதனையைப் படைத்தார். 2004 கோடைகால ஒலிம்பிக்கிலும் போட்டியிட்டுள்ளார். [1]

விளையாட்டு[தொகு]

இவர் இரண்டாவது அணியாக ஆல் -பேக் -12 இல் ஒரு புதிய வீரராகவும், மற்ற ஆண்டுகளில் மூன்று முறை முதல் அணியாகவும் இருந்தார். 2000 ஆம் ஆண்டில் இவர் வருடத்தின் சிறந்த பிட்சர் என்று பெயரிடப்பட்டார். [2] இவர் 1998 இல் இரண்டாவது அணியிலும், முதல் அணியில் மூத்தவராக இரு முறையில் விளையாடிய அமெரிக்கர் ஆவார். [3] [4] 2000 ஆண்டு உலகத் தொடரில் டீபால் ப்ளூ டெமான்ஸுக்கு எதிராக மே 25 அன்று தனது 100 வது ஆட்டத்தையும் வென்றார். [5]

குறிப்புகள்[தொகு]

  1. "Player Bio: Jennifer Spediacci". Gohuskies.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
  2. "Husky Softball Records & History" (PDF). Gohuskies.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
  3. "1998 Louisville Slugger/NFCA Division I All-America Teams". Nfca.org. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
  4. "2000 Louisville Slugger/NFCA Division I All-America Teams". Nfca.org. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
  5. "DePaul vs Washington (May 25, 2000)". Ncaa.org. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிபர்_எசுபெடியாக்கி&oldid=3029541" இலிருந்து மீள்விக்கப்பட்டது