ஜூசெப்பே வேர்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜூசெப்பே வேர்டி. ஜோவன்னி போல்டினி வரைந்த உருவப்படம், 1886
Giuseppe Verdi signature.jpg

ஜூசெப்பே போர்த்துனீனோ பிரான்சிஸ்கோ வேர்டி (Giuseppe Fortunino Francesco Verdi - அக்டோபர் 9 அல்லது 10, 1813 – ஜனவரி 27, 1901) ஒரு இத்தாலிய புனைவிய இசையமைப்பாளர். இவர் 19 ஆம் நூற்றாண்டின் இத்தாலிய இசைநாடக இசையமைப்பாளர்களில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். இவரது ஆக்கங்கள் உலகம் முழுவதிலும் உள்ள ஒப்பேரா மாளிகைகளில் நிகழ்த்தப்படுவனவாக உள்ளன.

இளமைக்காலம்[தொகு]

இவர் புசேத்தோ என்னும் ஊருக்கு அண்மையில் உள்ள லே ரொங்கோலே என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை கார்லோ ஜூசெப்பே வேர்டி, தாய் லூஜியா உத்தினி. அக்டோபர் 11 ஆம் தேதியிடப்பட்ட இவரது ஞானஸ்நானப் பதிவேடு "நேற்றுப் பிறந்தவர்" எனக் குறிப்பிடுகிறது. நாள் சூரியன் மறைவுக்குப் பின்னர் தொடங்குவதாகக் கருதப்படும் வழக்கம் உண்டு என்பதால் இவர் 9 அல்லது 10 ஆம் தேதி பிறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூசெப்பே_வேர்டி&oldid=2210208" இருந்து மீள்விக்கப்பட்டது