ஜீன் கபானிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீன் கபானிசு லூயிசு
Jean Louis Cabanis
பிறப்பு8 மார்ச்சு 1816
பெர்லின், ஜெர்மனி
இறப்பு20 பிப்ரவரி 1906
பிரெட்ரிக்ஷாகன், ஜெர்மனி
துறைபறவையியல்
அறியப்படுவதுஜர்னல் ஆப் ஆர்னித்தாலஜி (பறவையியல் ஆய்விதழ்)(1853)
Author abbrev. (zoology)கபானிசு

ஜீன் லூயிசு கபானிசு (Jean Cabanis)(8 மார்ச் 1816 - 20 பிப்ரவரி 1906) ஓர் செருமனிய பறவையியலாளர் ஆவார்.

கபானிசு பெர்லினில் பிறந்து பிரான்சில் குடிபெயர்ந்த பழைய ஹுகுனோட் குடும்பத்தினைச் சார்ந்தவர். இவரது ஆரம்பக்கால வாழ்க்கை பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவர் 1835 முதல் 1839 வரை பெர்லின் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். பின்னர் வட அமெரிக்காவிற்குச் சென்றார். 1841-ல் அதிக அளவிலான இயற்கை வரலாற்று சேகரிப்புடன் திரும்பினார். இவர் பெர்லின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உதவியாளராகவும் பின்னர் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் (இந்த நேரத்தில் இது பெர்லின் பல்கலைக்கழக அருங்காட்சியகமாக இருந்தது). இவருக்கு முன் இப்பொறுப்பினை மார்ட்டின் லிச்சென்ஸ்டீன் வகித்து வந்தார். இவர் 1853-ல் ஜர்னல் பார் ஆர்னிதோலஜியை (பறவையியல் ஆய்விதழ்) நிறுவினார். அடுத்த நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு இதன் தொகுப்பாசிரியராக இருந்தார். இவருக்குப் பிறகு இவரது மருமகன் அன்ரன் ரெய்ச்செனோவ் இப்பதவியினை ஏற்றார்.[1][2]

கபானிசு பிரெட்ரிக்ஷாகனில் பிப்ரவரி மாதம் 1906ஆம் ஆண்டு இறந்தார்.

கபானிசு காட்டுச்சில்லை எம்பெரிசா கபனிசி, கபானிசு முள்வால் சினாலாக்சிசு கபனிசி, அசூர்-ரம்ப்ட் டானேஜர் போசிலோசுட்ரெப்டசு கபானிசி மற்றும் கபானிசு பச்சைபுல் பிலாசுட்ரெபசு கபானிசி உட்படப் பல பறவைகளுக்கு இவரது பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Smith, Kimberly G. (2018). "100 Years Ago in the American Ornithologists' Union". The Auk 135: 152–154. doi:10.1642/AUK-17-214.1. 
  2. Schalow, Herman (1906). "Jean Cabanis". Journal für Ornithologie 54 (3): 329–358. doi:10.1007/BF02089277. https://www.biodiversitylibrary.org/part/142616. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • Digitised copy of Cabanis' book Museum Heineanum: Verzeichniss der ornithologischen Sammlung des Oberamtmann Ferdinand Heine, auf Gut St. Burchard vor Halberstadt ('Directory of the ornithological collection of the chief magistrate Ferdinand Heine, on St. Burchard near Halberstadt')
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீன்_கபானிசு&oldid=3813720" இலிருந்து மீள்விக்கப்பட்டது