ஜி. ஆர். சுவாமிநாதன்
நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் | |
|---|---|
| நீதியரசர், சென்னை உயர் நீதிமன்றம் | |
| பதவியில் 28 சூன் 2017 – பதவியில் உள்ளார் | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1968 திருவாரூர் |
| பணி | நீதியரசர் |
ஜி. ஆர். சுவாமிநாதன் (G.R. Swaminathan) 28 சூன் 2017 முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசராக உள்ளார். 1968இல் திருவாரூரில் பிறந்த சுவாமிநாதன்[1]சேலம் அரசு சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பு முடித்தார். முதுநிலை சட்டப் படிப்பை சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார்.[2]
தொழில்
[தொகு]சுவாமிநாதன் 1991-இல் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு, 1997 முதல் புதுச்சேரியில் தனியாக வழக்குரைஞர் தொழிலை நடத்தினார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிறுவப்பட்டப் பின்னர், சுவாமிநாதன் 2004 முதல் மதுரையில் வழக்குரைஞர் தொழிலை செய்தார். 2014 ஆம் ஆண்டில் சுவாமிநாதன் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.[3] 2017 சூன் 28 அன்று இவர் சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக நீதியரசராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2019-இல் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[4] இவர் 2030 மே 31 அன்று பணி ஓய்வு பெற உள்ளார்.[5]
விமர்சனங்கள்
[தொகு]பதவி நீக்க அறிவிப்பு
[தொகு]திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதனின் நடவடிக்கை நீதித்துறையை சீர்குலைப்பதாக உள்ளது எனக்காரணம் காட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு, 218ன் கீழ் பதவி நீக்கம் செய்யும் அறிவிப்பை, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 100 மக்களவையின் உறுப்பினர்கள் கையொப்பமிட்ட அறிவிப்பை 09 டிசம்பர் 2025 அன்று மக்களவைத் தலைவரிடம் வழங்கியுள்ளனர்[6].
நூல் விற்பனைக்கு தடை
[தொகு]திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கின் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதனை அவமதித்து, கீற்று பதிப்பகத்தினர் நூல் ஒன்றை வெளியிட்டதுடன், அதனை சென்னை புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைத்திருந்தனர். இது குறித்து புகார் மனு இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.[7]மேலும் நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதனை விமர்சித்து நூல் வெளியிடப்பட்டது.[8][9]இந்நூலை பறிமுதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்து 27 சனவரி 2026 அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[10][11]
பொதுநல வழக்கு
[தொகு]திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது அவதூறான மற்றும் தூண்டிவிடும் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் 27 சனவரி 2026 அன்று தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோருக்கு அறிவிப்பாணை பிறப்பித்துள்ளது.[12][13]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Staff Reporter (2017-06-29). "Six HC judges sworn in" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/six-hc-judges-sworn-in/article19166553.ece.
- ↑ "Madras High Court | Profile of Judges". www.hcmadras.tn.nic.in. Retrieved 2021-12-11.
- ↑ Mohapatra, Samhati (2021-12-16). "Why Madras HC struck down sedition case against YouTuber Maridoss". The Federal (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-12-23.
- ↑ S, Mohamed Imranullah (2019-04-06). "Six HC judges made permanent" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/six-hc-judges-made-permanent-madras-high-court-union-ministry-of-law-and-justice/article26751447.ece.
- ↑ S, Mohamed Imranullah (2019-07-01). "Self-critical High Court judge raises the bar" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/self-critical-high-court-judge-raises-the-bar-justice-gr-swaminathan/article28237249.ece.
- ↑ Move to impeach Justice Swaminathan an attempt to destabilise judiciary: HC advocates
- ↑ Impeachment Motion And Judicial Independence
- ↑ சென்னை புத்தக காட்சியில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை அவமதித்து புத்தகம்: மத்திய அரசுக்கு பாஜக புகார் கடிதம்
- ↑ நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்து நுால்)
- ↑ நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் பறிமுதல்! உயர் நீதிமன்றம் உத்தரவு!
- ↑ [https://www.dinamalar.com/news/tamil-nadu-news/supreme-court-slams-tamil-nadu-government-dgp-for-defamatory-remarks-against-judge-swaminathan/4137292
- ↑ Deepam row: Supreme Court notice on plea over protests targeting High Court judge
- ↑ நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தமிழக டி.ஜி.பி., பதில்