உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிம்மி ஷீல்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜிம்மி ஷீல்ட்ஸ் (Jimmy Shields, சனவரி 1900 - 13 ஏப்ரல் 1949) ஒரு பிரித்தானிய பொதுவுடைமை ஆர்வலரும் பத்திரிகை ஆசிரியரும் ஆவார்.

ஸ்காட்லாந்தின் கிரீனக்கில் பிறந்த இவர் 1921 ஆம் ஆண்டு பெரிய பிரித்தானியாவின் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். வேலையின்மை காரணமாக தென் ஆப்பிரிக்காவிற்கு 1925 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்தார். தென் ஆப்பிரிக்காவின் கம்யூனிஸ்ட் கட்சியில்[1] சேர்ந்து குறுகிய காலத்திலேயே அதன் பொதுச் செயலாளராக ஆனார்.[2] இந்த காலகட்டத்தில் ஜிம்மி ஷீல்ட்ஸின் உரையினால் ஈர்க்கப்பட்டு எட்வின் தாபோ மொபுட்சன்யானா பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.[3]

ஜிம்மி ஷீல்ட்ஸ் 1927ஆம் ஆண்டு ஸ்காட்லாந்திற்கு திரும்பினார். அங்கு அவர் பெரிய பிரித்தானியாவின் பொதுவுடைமைக் கட்சியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி தேசிய நிர்வாகியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அன்றாடப் பணியாளர் (Daily Worker) என்ற நாளிதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். 1932 முதல் பன்னாட்டுப் பொதுவுடைமையின் (கம்மின்டர்ன்) பிரித்தானியப் பிரதிநிதியாகச் செயல்பட்டார். பெரிய பிரித்தானியாவின் பொதுவுடைமைக் கட்சியின் பன்னாட்டுத் துறையின் தலைவராக இருந்து பல இடங்களுக்கு பயணித்தார்.

இரண்டாம் உலகப்போரின் போது காச நோயால் பாதிக்கப்பட்டு, பெரும்பாலான நாட்கள் ஹோல்ட் பேணுகையில்லத்தில் இருந்து, 1949 ஆம் ஆண்டு இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shields Jimmy, Compendium of Communist Biography
  2. A. Lerumo, Fifty fighting years: the Communist Party of South Africa, 1921-1971, p.52
  3. Edwin Thabo Mofutsanyana, South African History Online
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்மி_ஷீல்ட்ஸ்&oldid=3858694" இலிருந்து மீள்விக்கப்பட்டது