ஜிதேந்திர மோகன் அன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிதேந்திர மோகன் அன்சு
Jitendra Mohan Hans
பிறப்பு27 நவம்பர் 1955 (1955-11-27) (அகவை 68)
புது தில்லி
பணிகாது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்
அறியப்படுவதுஅன்சு பேச்சு அடைப்பிதழ்
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
drjmhans.com

ஜிதேந்திர மோகன் அன்சு (Jitendra Mohan Hans) என்பவர் இந்திய காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் குரல்வளை புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேச்சு மறுவாழ்வுக்கான பேச்சு அடைப்பிதழைக் கண்டுபிடித்தவர் ஆவார்.[1] இவர் இந்தியாவின் செயற்கை உள்காது பொருத்தும் அறுவை சிகிச்சை குழுமத்தின் நிறுவனர் உறுப்பினராகவும், 2014-ல் உள்நாட்டு பயோனிக் காதை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் திட்டக் குழுவின் பகுதியாகவும் இருந்துள்ளார்.[2]

கல்வி[தொகு]

அன்சு 27 நவம்பர் 1955 -ல் பிறந்தார்.[1] இவர் 1978-ல் மீரட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.[3]

மருத்துவ பணி[தொகு]

இவர் இந்தியப் பிரதமரின் கெளரவ காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றியுள்ளார். அகில இந்தியப் பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனம், மைசூர் மற்றும் அலி யஜுர் ஜங் தேசிய காதுகேளாமை நிறுவனத்தில் மருத்துவராக அரசாங்க பதவி நியமனம் பெற்றார்.[4] இவர் உட்செவிச்சுருள் பதியம் நுட்பங்களுக்கான முன்னோடியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.[5]

விருதும் கவுரவுமும்[தொகு]

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.[6] மருத்துவத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு 2005ஆம் ஆண்டு பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Autographs of Scholars and Scientists of India". Indian Autographs. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  2. "Indian researchers set to test market-busting, low-cost homegrown bionic ear". Market Express. 17 November 2014. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  3. "Indian Medical Registry Search". Medical Council of India. 2015. Archived from the original on 5 October 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  4. "Doctor's Profile". Fortis Hospitala. 2015. Archived from the original on 9 October 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  5. "Kids to break silence with chip implant" (PDF). Times of India. 3 October 2011. Archived from the original (PDF) on 3 June 2021. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  6. "Dr. J.M Hans". Rockland Hospital. 2015. Archived from the original on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  7. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிதேந்திர_மோகன்_அன்சு&oldid=3790050" இலிருந்து மீள்விக்கப்பட்டது