உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் கார்டன் மீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் கார்டன் மீடு
பிறப்பு(1815-12-31)திசம்பர் 31, 1815
இறப்புநவம்பர் 6, 1872(1872-11-06) (அகவை 56)
Place of burial
சார்பு ஐக்கிய அமெரிக்கா
ஒன்றியம்
சேவை/கிளை ஐக்கிய அமெரிக்கா இராணுவம்
ஒன்றிய படைத்துறை
சேவைக்காலம்1835–1836; 1842–1872
தரம் மேஜர் ஜெனரல்
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் செமினோலே போர்
மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
அமெரிக்க உள்நாட்டுப் போர்

ஜார்ஜ் கார்டன் மீடு (George Gordon Meade, திசம்பர் 31, 1815 – நவம்பர் 6, 1872) ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை அதிகாரியும் பல கலங்கரை விளக்கங்களின் கட்டுமானத்தில் பங்கேற்ற பொறியியலாளரும் ஆவார். இரண்டாம் செமினோலே போர் மற்றும் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்களில் திறம்பட செயலாற்றியவர். அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது இவர் பொடோமாக் படைப்பிரிவிற்கு தலைமை ஏற்றார். 1863ஆம் ஆண்டில் நடந்த கெட்டிசுபெர்க்கு சண்டையில் ராபர்ட் ஈ. லீ தலைமையேற்ற கூட்டமைப்புப் படைகளை வெற்றி கண்டமைக்காக பெரிதும் அறியப்படுகிறார். மீடு எசுப்பானியாவில் உள்ள காடிசில் பிறந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_கார்டன்_மீடு&oldid=2707794" இலிருந்து மீள்விக்கப்பட்டது