உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் ஆன்ட்ரூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் ஐர் ஆண்ட்ரூஸ்
ஆண்ட்ரூஸ் 1973
பிறப்புதிசம்பர் 4, 1938 (1938-12-04) (அகவை 85)
சேலம், ஓரிகான், அமெரிக்கா.
துறைகணித பகுப்பாய்வு மற்றும் சேர்வியல் (கணிதம்)
பணியிடங்கள்பென்சி்வேனியா மாநில பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்
 • ஓரிகான் மாநில பல்கலைக்கழகம் (B. S.
ஆய்வு நெறியாளர்ஹான்ஸ் ராடிமாசர்
அறியப்படுவதுஇராமானுஜரின் காணாமல் போன ஏடு

ஜார்ஜ் ஐர் ஆண்ட்ரூஸ் (George Eyre Andrews) என்பவர் ஒரு அமெரிக்க கணிதவியலாளர் ஆவார். 1938 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் பிறந்தார்.[1] சிறப்பு சார்புகள், எண் கோட்பாடு, கணித பகுப்பாய்வு மற்றும் சேர்மானவியல் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

கல்வி மற்றும் பணி[தொகு]

இவர் தற்போது இவான் பக் தலைவராக இருந்த பென்சி்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணிபுரிந்தார்.[2][3]. இவர் தனது இளங்கலைப் படிப்பை ஓரிகான் மாநில பல்கலைக்கழகத்தில் கற்றார்.[2] இவர் 1964 ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார், அங்கு இவரது ஆலோசகராக ஹான்ஸ் ராட்மேச்சர் இருந்தார்.[1][4] 2008-2009 காலகட்டத்தில் இவர் அமெரிக்கன் கணிதவியல் சங்கத்தின் தலைவராக இருந்தார்.[5]

பங்களிப்புகள்[தொகு]

ஆண்ட்ரூஸின் பங்களிப்புகளில் பல ஒரு பொருள் நூல்களாகும். 250 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் q-தொடர்கள், சிறப்பு சார்புகள், சேர்வியல் மற்றும் பயன்பாடுகள் பற்றிய சிறப்பான கட்டுரைகளும் உள்ளன.[6][7] இவர் எண் பிரிவினை கோட்பாட்டில் உலகின் முன்னணி நிபுணராகக் கருதப்படுகிறார்.[1][8] [2] 1976 இல் இராமானுசரின் காணாமல் போன குறிப்பு ஏட்டினை கண்டுபிடித்தார். இவர் கணிதக் கற்பித்தலில் ஆர்வம் கொண்டவர்.[2] இவரது புத்தகமான The Theory of Partitions என்பது எண் பிரிவினை பற்றிய நிலையான குறிப்பு ஆகும்.[1] இவரது எண் பிரிவினை மற்றும் q-தொடர்களின் கோட்பாடுகளில் கணிதத்தில் திறன்மிகுந்தவர் ஆவார்.எண் கோட்பாடு மற்றும் சேர்வியல் போன்றவற்றில் இவரது பணி இயற்பியலில் பல முக்கியமான பயன்பாடுகளுக்கு வழிவகுத்தது.[9]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

ஆண்ட்ரூஸ் 2003 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] இவர் 1997 ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டில் பெர்லினில் நடந்த கணிதவியலாளர்களின் சர்வதேச காங்கிரசால் அழைக்கப்பட்ட சிறப்பு பேச்சாளராக இருந்தார்.[10] 2012 ஆம் ஆண்டில் இவர் அமெரிக்கன் கணிதவியல் சங்கத்தின் உறுப்பினரானார்.[11][12] 1998 ஆம் ஆண்டில் பர்மா பல்கலைக்கழகம், 2002 ஆம் ஆண்டில் புளோரிடா பல்கலைக்கழகம், 2004 ஆம் ஆண்டில் வாட்டர்லூ பல்கலைக்கழகம், 2012 ஆம் ஆண்டில் இந்தியாவின் கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் 2014 ஆம் ஆண்டில் அர்பானா-சாம்பேனில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின.[6][13][9]

வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 Berndt, Bruce C.; Rankin, Robert Alexander, eds. (1995), Ramanujan: Letters and Commentary, History of Mathematics, vol. 9, American Mathematical Society, p. 305, Bibcode:1995rlc..book.....B, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780821891254, Andrews is generally recognized as the world's leading authority on partitions and is the author of the foremost treatise on the subject.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 Inaugural Biography Article at the National Academy of Sciences.
 3. Evan Pugh Professors பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம், PSU, retrieved 2013-11-21.
 4. கணித மரபியல் திட்டத்தில் ஜார்ஜ் ஆன்ட்ரூஸ்
 5. AMS presidents, a timeline
 6. 6.0 6.1 O'Connor, John J.; Robertson, Edmund F., "ஜார்ஜ் ஆன்ட்ரூஸ்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
 7. The work of George Andrews: a Madison perspective – by Richard Askey, in "The Andrews Festschrift (Maratea, 1998)", Sem. Lothar. Combin. vol. 42 (1999), Art. B42b, 24 pp.
 8. Alladi, Krishnaswami (2012), Ramanujan's Place in the World of Mathematics: Essays Providing a Comparative Study, Springer, p. 122, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132207672, George Andrews of the Pennsylvania State University, the world authority on partitions and q-geometric series.
 9. 9.0 9.1 "University of Illinois commencement ceremony to take place May 17 at Memorial Stadium (honorary doctorates for George E. Andrews and Phillip Allen Sharp)". Campus News (illinois.edu). 5 May 2014.
 10. "Book of Members, 1780-2010: Chapter A" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 18 April 2011.
 11. Andrew, George E. (1998). "Mathematics education: Reform or renewal?". Doc. Math. (Bielefeld) Extra Vol. ICM Berlin, 1998, vol. III. pp. 719–721.
 12. List of Fellows of the American Mathematical Society, retrieved 2012-11-03.
 13. Honorary doctorates for Andrews, Askey and Berndt
 14. Askey, Richard (1979). "Review: George E. Andrew, The theory of partitions". Bull. Amer. Math. Soc. (N.S.) 1 (1): 203–210. doi:10.1090/s0273-0979-1979-14556-7. http://projecteuclid.org/euclid.bams/1183542336. 
 15. Glass, Darren (5 April 2005). "Review of Integer Partitions by George E. Andrews and Kimmo Eriksson". MAA Reviews, Mathematical Association of America.
 16. David Bressoud (2006). "Review: Ramanujan's Lost Notebook, Part I, by George Andrews and Bruce C. Berndt". Bull. Amer. Math. Soc. (N.S.) 43 (4): 585–591. doi:10.1090/s0273-0979-06-01110-4. https://www.ams.org/journals/bull/2006-43-04/S0273-0979-06-01110-4/S0273-0979-06-01110-4.pdf. 
 17. Wimp, Jet (2000). "Review: Special functions, by George Andrews, Richard Askey, and Ranjan Roy". Bull. Amer. Math. Soc. (N.S.) 37 (4): 499–510. doi:10.1090/S0273-0979-00-00879-X. https://www.ams.org/journals/bull/2000-37-04/S0273-0979-00-00879-X/S0273-0979-00-00879-X.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_ஆன்ட்ரூஸ்&oldid=3868764" இலிருந்து மீள்விக்கப்பட்டது