ஜார்ஜி சுகோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகோவ்

ஜார்ஜி கான்ஸ்டாண்டிநோவிச் சுகோவ் (திசம்பர் 01, 1986 - சூன் 18, 1974) என்பவர் ஒரு சோவியத் தளபதி ஆவார். இவர் தலைமை தளபதி, இராணுவ மந்திரி மற்றும் பொதுவுடமை கட்சியின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இரண்டாம் உலகப்போரின்போது சிவப்பு இராணுவத்தின் மிக முக்கியமான வெற்றிகளை தலைமை ஏற்று இவர் பெற்றுத்தந்தார்.

நடு உருசியாவில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கட்டாயத்தின் காரணமாக ஏகாதிபத்திய உருசிய இராணுவத்தில் இணைந்து முதலாம் உலகப் போரில் பங்கு பெற்றார். உருசிய உள்நாட்டு போரின்போது சிவப்பு இராணுவத்தில் சேவையாற்றினார். படிப்படியாக உயர்ந்த இவர் 1939ஆம் ஆண்டு ஒரு இராணுவ குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பை பெற்றார். கல்கின் கோல் யுத்தத்தில் ஜப்பானிய படைகளுக்கு எதிராக முக்கியமான வெற்றியைப் பெற்றார். இந்த வெற்றிக்காக தனது முதலாவது, சோவியத் யூனியனின் கதாநாயகன் விருதை பெற்றார். 1941ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவப்பு ராணுவத்தின் பொதுவான ஊழியர்களின் தலைமை பகுதிக்கு இவர் உயர்த்தப்பட்டார்.

சோவியத் யூனியன் மீது ஜெர்மனி ஊடுருவிய பின்னர் சுகோவ் தனது தலைமைப் பதவியை இழந்தார். இறுதியாக லெனின்கிராட், மாஸ்கோ மற்றும் சுடாலின்கிராட் ஆகிய நகரங்களின் தற்காப்பை அமைத்துக் கொடுத்தார். 1945ஆம் ஆண்டு பெர்லின் யுத்தத்தில் பங்கேற்றார். அந்த யுத்தத்தில் நாசி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டது. ஐரோப்பாவில் போரானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. போரில் இவரது பங்கை அடையாளப்படுத்தும் விதமாக ஜெர்மனி சரணடைவதை ஒப்புக் கொள்பவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945ஆம் ஆண்டில் மாஸ்கோ வெற்றி அணிவகுப்பை மேற்பார்வையிட்டார்.

போருக்குப் பிறகு இவரது வெற்றி மற்றும் பிரபலமான தன்மையானது ஜோசப் ஸ்டாலின் இவரை ஒரு போட்டியாளராக கருதும் நிலைக்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக இவரது பதவிகள் இவரிடமிருந்து பறிக்கப்பட்டன. 1953ஆம் ஆண்டில் ஸ்டாலினின் இறப்பிற்கு பிறகு சோவியத் தலைமைக்கு நிக்கித்தா குருசேவிற்கு இவர் ஆதரவளித்தார். 1955ஆம் ஆண்டு ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டார். 1957ஆம் ஆண்டு இவர் மீண்டும் மதிப்பை இழந்தார். ஓய்வுபெற கட்டாயப்படுத்தப்பட்டார். மீண்டும் முக்கியமான பதவிக்கு இவர் வரவில்லை. 1974ஆம் ஆண்டு இறந்தார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜி_சுகோவ்&oldid=3582509" இலிருந்து மீள்விக்கப்பட்டது