ஜாசியா அக்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாசியா அக்தர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜாசியா அக்தர்
பிறப்பு27 மே 1988 (1988-05-27) (அகவை 35)
சோபியான் மாவட்டம், சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா]
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மிதவேகம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013-2016பஞ்சாப் பெண்கள் துடுப்பாட்ட அணி
மூலம்: ESPNcricinfo, சூலை 24 2017

ஜாசியா அக்தர் (Jasia Akhtar) சம்மு காசுமீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். டி 20 குயின்ஸ் லெவன் கிரிக்கெட் லீக்கின் இறுதிப் போட்டியில் இலங்கை லெவன் அணிக்கு எதிராக எல்.ஐ.சி சண்டிகர் லெவன் அணிக்காக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்த தேசிய அளவிலான பெண்கள் துடுப்பாட்டப் போட்டியில் அக்தர் 2013 முதல் பஞ்சாப் துடுப்பாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். [1] இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியில் இடம் பிடித்த முதல் சம்மு காசுமீர் பெண் எனும் பெருமை பெற்றார். [2] ஜனவரி 2019 இல், 2018–19 சீனியர் மகளிர் சேலஞ்சர் கோப்பைக்கான இந்தியா ரெட் அணியில் இடம் பெற்றார். [3]

சான்றுகள்[தொகு]

  1. "Jasia Akhtar: Top Kashmiri woman cricketer who plays for Punjab". Greater Kashmir. Archived from the original on 14 December 2018. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  2. "Kashmiri cricketer Jasia Akhtar nurtures big dreams after national camp call-up". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  3. "Pandey, Raut and Meshram to lead in Challenger Trophy". 21 December 2018. https://www.cricbuzz.com/cricket-news/105746/shikha-pandey-punam-raut-and-mona-meshram-to-lead-in-womens-challenger-trophy-2018-19. பார்த்த நாள்: 1 January 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாசியா_அக்தர்&oldid=3572998" இலிருந்து மீள்விக்கப்பட்டது