ஜாக் வெட்ரியானோ
ஜாக் வெட்ரியானோ | |
---|---|
பிறப்பு | ஜாக் ஹோகன் 17 நவம்பர் 1951 மெத்தில், இசுக்கொட்லாந்து |
தேசியம் | இசுகொட்லாந்தியர் |
கல்வி | சுய சிந்தனை |
அறியப்படுவது | ஓவியம் |
அரசியல் இயக்கம் | சமகால ஓவியம் |
ஜாக் வெட்ரியானோ (Jack Vettriano) (ஜாக் ஹோகன்), 17 நவம்பர் 1951 ல்[1] பிறந்தார். இவர் ஒரு இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவரது 1992ஆம் ஆண்டு ஓவியமான "தி சிங்கிங் பட்லர்" பிரிட்டனில் அதிகம் விற்பனையான ஓவியமாக மாறியது.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஜாக் வெட்ரியானோ, இசுக்கொட்லாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸில் பைப் என்ற இடத்தில் பிறந்தார். தனது பிறந்த இடத்திலிருந்து தெற்கே 30 நிமிட பயணத்திலுள்ள தொழில்துறை கடலோர நகரமான மெத்தில் என்ற இடத்தில் வளர்ந்தார். இவர் தனது தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் ஒரு ஸ்பார்டன் சுரங்கத் தொழிலாளியின் வீட்டில் வசித்து வந்தார். தனது சகோதரருடன் படுக்கையையும் அவருடைய ஆடைகளையும் பகிர்ந்து கொண்டார். 10 வயதிலிருந்தே, இவரது தந்தை இவருக்கு பத்திரிக்கை போடுவது, பால் விற்பது, சாரளங்களை சுத்தம் செய்வது, உருளைக்கிழங்கை எடுப்பது போன்ற பணம் சம்பாதிக்கும் அனைத்து வேலைக்கும் அனுப்பினார். இவரது தந்தை இவரது வருமானத்தில் பாதியை எடுத்துக் கொண்டார்.[2]
வெட்ரியானோ 16 வயதில் பள்ளியை விட்டு வெளியேறி பின்னர் ஒரு பயிற்சி சுரங்க பொறியியலாளர் ஆனார். இவரது காதலி இவரது 21வது பிறந்தநாளுக்காக நீர்வண்ணங்களை பரிசளித்ததைத் தொடர்ந்து 1970களில் ஓவியத்தை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டார்..[3][1] அவரது படைப்புகளின் பெரும்பகுதி கிர்கல்டி அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தில் ஓவியங்களை அவர் படித்ததன் தாக்கம் கொண்டிருந்தன. 1984 ஆம் ஆண்டில், வெட்ரியானோ தனது படைப்புகளை அருங்காட்சியகத்தில் ஷெல்- ஸ்பான்சர் செய்த கலைக் கண்காட்சியில் காட்சிப்படுத்தினார். [4]
1987 ஆம் ஆண்டில், இவருக்கு 36 வயதாக இருந்தபோது, வெட்ரியானோ தனது மனைவி கெயிலை விட்டு வெளியேறினார். கல்வி ஆராய்ச்சியில் தனது வேலையை விட்டுவிட்டு, எடின்பர்க்கிற்கு குடிபெயர்ந்தார், அங்கு இவர் தனது தாயின் இயற்பெயரை ஏற்றுக்கொண்டார்.[1] இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நுண்கலை படிக்க விண்ணப்பித்தார். ஆனால் இவர் கேட்ட துறை நிராகரிக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Seenan, Gerard (2002-07-27). "Profile: Jack Vettriano" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/books/2002/jul/27/featuresreviews.guardianreview12.
- ↑ Ewing, Sarah (14 August 2009). "Jack Vettriano: 'I've gone from hand-me-downs to Armani'". The Daily Telegraph (London). https://www.telegraph.co.uk/finance/personalfinance/fameandfortune/6020079/Jack-Vettriano-Ive-gone-from-hand-me-downs-to-Armani.html.
- ↑ "Vettriano gallery out of the frame". Edinburgh: Scotsman.com News. 30 July 2007. http://news.scotsman.com/topics.cfm?tid=244&id=1183562007.
- ↑ Simpson, Donna (11 February 2009). "Vettriano gesture of thanks". The Fife Free Press. Archived from the original on 21 July 2009. பார்க்கப்பட்ட நாள் 5 March 2009.
- ↑ "Jack Vettriano: The poster boy of popular art". The Independent (London). 22 October 2010. https://www.independent.co.uk/arts-entertainment/art/features/jack-vettriano-the-poster-boy-of-popular-art-2112954.html.