ஜாக்கோமோ புச்சீனி
ஜாக்கோமோ புச்சீனி | |
---|---|
பிறப்பு | 22 திசம்பர் 1858 லூக்கா |
இறப்பு | 29 நவம்பர் 1924 (அகவை 65) பிரசெல்சு நகரம், Brussels |
பணி | Opera composer, இசையமைப்பாளர், அரசியல்வாதி, இசை நடத்துநர், organist |
சிறப்புப் பணிகள் | I Crisantemi See list of compositions by Giacomo Puccini |
வம்சம் | Puccini |
கையெழுத்து | |
ஜாக்கோமோ ஆன்டோனியோ டொமெனிக்கோ மைக்கேல் செக்கண்டோ மாரியா புச்சீனி (Giacomo Antonio Domenico Michele Secondo Maria Puccini - டிசம்பர் 22, 1858 – நவம்பர் 29, 1924) ஒரு இத்தாலிய இசையமைப்பாளர்.[1][2][3]
இளமைக்காலம்
[தொகு]புச்சீனி, டஸ்கனியில் உள்ள லூக்காவில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாக இசைப் பின்னணி கொண்டவர்கள். ஜாக்கோமோவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே இவரது தந்தை இறந்துவிட்டார். படிப்பதற்காக புச்சீனி அவரது உறவினரான போர்த்துனாட்டோ மாகி என்பவரிடம் அனுப்பப்பட்டார். மாகி இவரை ஒரு ஏழை, ஒழுக்கமற்ற மாணவனாகவே பார்த்துவந்தார். பின்னர் இவர் லூக்காவில் தேவாலயம் ஒன்றில் ஆர்கன் இசைக் கலைஞராகச் சேர்ந்தார். வேர்டியின் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்த பின்னர் ஒரு இசையமைப்பாளராக ஆகவேண்டும் என்ற எண்ணம் இவருள் துளிர்த்தது. இவரும் இவரது உடன்பிறந்தவரான மைக்கேலும் 18.5 மைல்கள் (30 கிமீ) தூரம் நடந்தே சென்று பீசா நகரில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியைப் பார்த்தனர்.
1880ல், உறவினர்களின் உதவியுடனும், நன்கொடை ஒன்றின் உதவியுடனும், மிலான் கான்சர்வேட்டரி எனப்பட்ட இசைக் கல்லூரி ஒன்றில் சேர்ந்து அமில்கரே போன்சியெல்லி, அன்டோனியோ பசினி ஆகியோரிடம் இசையமைப்புப் பயிற்சி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Giacomo Puccini". Encyclopædia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 December 2022.
- ↑ Dry 1905, ப. [page needed]
- ↑ "Cattedrale di S. Martino". Centro di Studi Giacomo Puccini. பார்க்கப்பட்ட நாள் 3 November 2012.