ஜலேஷ்வர் மகதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜலேஷ்வர் மகதோ (Jaleswar Mahato) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2000 முதல் 2009 வரை பாக்மாரா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் ஐக்கிய ஜனதா தளத்தின் ஜார்கண்ட் மாநிலத் தலைவராக இருந்தார். இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் அமைச்சராக இருந்த காலத்தில் முழு மாநிலத்திலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. இவரது பதவிக்காலத்தில் அப்பழுக்கற்ற ஆளுமையாக அறியப்பட்டுள்ளார். இவர் பாக்மாராவில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடுகளை இன்னும் காணலாம். இவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு நெருக்கமான தலைவராக அறியப்படுகிறார். இவர் தனது கிரேட் ஜார்க்கண்ட் இயக்க ஆர்வலர் மறைந்த பினோத் பிஹாரி மகதோவின் மாணவராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது அவர் உள்ளூர் நிலக்கரி மாஃபியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

ஜலேஷ்வர் மகதோ 29 டிசம்பர் 2018 அன்று புதுதில்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://myneta.info/jarka05/candidate.php?candidate_id=29
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலேஷ்வர்_மகதோ&oldid=3210483" இலிருந்து மீள்விக்கப்பட்டது