உள்ளடக்கத்துக்குச் செல்

ஜரோஸ்லாவ் ஹோன்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜரோஸ்லாவ் ஹோன்கா
சுதேசியப் பெயர்
Ярослав Гунька
பிறப்பு1925 (அகவை 98–99)
உர்மான், உக்ரைன், (இரண்டாம் போலாந்து குடியரசு)
சார்புநாஜி ஜெர்மனி
சேவை/கிளை Waffen-SS
சேவைக்காலம்1943–1945
படைப்பிரிவு SS Division Galicia
அறியப்படுவது2023ல் கனடா நாடாளுமன்றத்தின் கீழளவையில் பாராட்டு பெற்றவர்
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்

ஜரோஸ்லாவ் ஹோன்கா (Yaroslav Hunka) (பிறப்பு:ஏறத்தாழ 1925)[1] தற்போதைய உக்ரைன் நாட்டில் பிறந்தவரும், கனடாவில் குடியேறி வாழும் முன்னாள் நாஜி ஜெர்மனியின் இராணுவ வீரரும், இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்டவரும் ஆவார்.[2]

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் ஜரோஸ்லாவ் ஹோன்கா ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார்.[3]1951ல் ஜரோஸ்லாவ் ஹோன்கா மார்கரெட் ஆன் எட்கர்டுடன் என்பவரை மணந்து பின் தனது மகன்களுடன் கனடாவில் குடிபெயர்ந்தார்.[4]

கனடா நாடாளுமன்றப் பாராட்டுக்கான விமர்சனங்கள்[தொகு]

கனடா பிரதமர் துருடோ மற்றும் உக்ரைன் அதிபர் வலோதிமிர் செலேன்சுக்கி முன்னிலையில் 98 வயதான ஜரோஸ்லாவ் ஹோன்கா 22 செப்டம்பர் 2023 அன்று கனடா நாடாளுமன்றத்தில் பேசி முடித்த பிறகு, கனடா நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் அந்தோணி ரோட்டா, ஜரோஸ்லாவ் ஹோன்காவின் நாட்டுப்பற்றைப் பாராட்டி பேசினார். பின்னர், ஜரோஸ்லாவ் ஹோன்கா நாஜி ஜெர்மனியின் படைவீரர் என அடையாளம் காணப்பட்டார். ஹோன்காவை மக்களவையில் பாராட்டியமைக்கு மக்களவைத் தலைவர் வருத்தம் தெரிவித்தார்.[5]யூதர்களைக் கொன்ற நாஜி ஜெர்மனி இராணுவத்தில் பணியாற்றியவரை நாடாளுமன்றத்தில் வைத்து பாராட்டியமைக்காக கனடா அரசு யூத சமூகத்திடம் வருத்தம் தெரிவித்தது.[6][7]

26 செப்டம்பர் 2023 அன்று போலந்து நாட்டின் கல்வி அமைச்சர், போர் குற்றவாளியான ஜரோஸ்லாவ் ஹோன்காவை கனடாவிலிருந்து நாடு கடத்தக் கோரினார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Everson, Alana (May 7, 2022). "Sudbury hosts rally for Ukraine". CTV News. Archived from the original on July 6, 2022. பார்க்கப்பட்ட நாள் September 24, 2023.
  2. Paas-Lang, Christian (September 24, 2023). "House Speaker apologizes for honouring Ukrainian who fought in Nazi unit in WW II". Canadian Broadcasting Corporation இம் மூலத்தில் இருந்து September 25, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230925000224/https://www.cbc.ca/news/politics/anthony-rota-ukrainian-veteran-apology-1.6977117. 
  3. "New Endowments" (PDF). CIUS Newsletter. University of Alberta. 2020. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.
  4. Gillies, Rob (September 22, 2023). "Zelenskyy speaks before Canadian Parliament in his campaign to shore up support for Ukraine" இம் மூலத்தில் இருந்து September 24, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230924033203/https://apnews.com/article/zelenskyy-trudeau-canada-ukraine-parliament-b0f23d207592031cedb030292eb3ae01. 
  5. Schroeder, Pete (September 24, 2023). "Canada House speaker apologizes for recognition of veteran who fought for Nazis". Reuters இம் மூலத்தில் இருந்து September 25, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230925025302/https://www.reuters.com/world/canada-house-speaker-apologizes-recognition-veteran-who-fought-nazis-2023-09-24/. 
  6. Duggan, Kyle (September 24, 2023). "Nazi-linked veteran received ovation during Zelenskyy's Canada visit". Politico. Archived from the original on September 24, 2023. பார்க்கப்பட்ட நாள் September 24, 2023.
  7. Golinkin, Lev (September 24, 2023). "Zelenskyy joins Canadian Parliament's ovation to 98-year-old veteran who fought with Nazis". The Forward. Archived from the original on September 24, 2023. பார்க்கப்பட்ட நாள் September 24, 2023.
  8. Zimonjic, Peter (September 26, 2023). "Poland's education minister says he's 'taken steps' to extradite Yaroslav Hunka". Canadian Broadcasting Corporation. பார்க்கப்பட்ட நாள் September 26, 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜரோஸ்லாவ்_ஹோன்கா&oldid=3802878" இலிருந்து மீள்விக்கப்பட்டது