உள்ளடக்கத்துக்குச் செல்

ஜம்புலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்புலிங்கம் நாடார் என்ற சுயம்புலிங்கம் நாடார் என்று அழைக்கப்படும் இவர் நெல்லை மாவட்டத்தில் வள்ளியூருக்குத் தெற்கே உள்ள வடலிவிளை என்னும் கிராமத்தில் பிறந்தவர். தெலுங்கு பாளையக்காரர்களை பகைத்ததன் விளைவாகப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை பெற்று ஜெயிலிலிருந்து தப்பியோடித் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொள்ளைக்காரனாக மாறி ஏழைமக்களுக்கு உதவியவர் செம்புலிங்கம்.

வடலிவிளையைச் சேர்ந்த தெலுங்கு பாளையக்காரர் ஏழைப் பெண்ணொருத்தியை மானபங்கம் செய்ய முயன்றபோது செம்புலிங்கம் தடுத்துப் செயலைக் கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த பாளையக்காரர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, செம்புலிங்கம் தன் வீட்டில் பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டிப் ஆங்கிலேய போலீசாரைக் கொண்டு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார். செய்யாத குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற அவர் சிறையிலிருந்து தப்பி வந்து தெலுங்கு பாளையக்காரரை பலி வாங்கினார். பின்பு தலைமறைவாகி ஆங்கிலேயருக்கு எதிரியாக மாறினான். வேறு ஒரு இடத்தில் நடந்த கொள்ளைச் செயலில் செம்புலிங்கத்திற்கும் தொடர்பு உண்டு என்று துரைராஜ் என்பவனால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு செம்புலிங்கம் சிறை சென்றதாகக் கூறுகிறார் ஆ. சிவசுப்பிரமணியன். மேற்கூறிய இரண்டு நிகழ்ச்சிகள் வேறுவேறாக அமைந்திருந்தாலும் செம்புலிங்கம் ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை எதிர்த்ததால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, சிறை சென்றதே அடிப்படை என்பது தெளிவாகின்றது.

ஆங்கிலேருக்கு சிம்ம சொப்பனமாய் 30 ஆண்டுகள் விளங்கிய அவர் போலீசாரையே துரத்தியடித்திருக்கின்றார். இறுதியில் போலீசாரின் அச்சுறுத்தலால் தன் பாளையக்காரர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டுத் சுட்டுக் கொல்லப்படுகின்றார், ஆங்கிலேயர்களை ஆயுதம் கொண்டு எதிர்த்த அவரை சுதந்திர போரட்ட வீரர்ராக அறியப்படவேண்டும் ஆனால் ஆதிக்க ஜாதியினராலும் ஆங்கிலேய அரசாங்கத்தாலும் கொள்ளைக் குற்றம் சாட்டப்பட்ட அவர் மக்களால் பாதுகாக்கப்பட்டார், பாடப்பட்டார்

இலக்கியத்தில் ஜம்புலிங்கம்[தொகு]

செம்புலிங்கத்தின் கொள்ளைச் செயல்களைப் புகழ்ந்து பாடுவதாக ஐம்பத்தைந்து பாடல்கள் கி.வா.ஜ தொகுத்த மலையருவியில் இடம்பெற்றுள்ளன. 1929இல் செம்புலிங்க நாடார் துர்விளையாடற் சிந்து என்ற பெயரில் பெரிய எழுத்துப் புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் செம்புலிங்கத்தின் வரலாறு முழுமையாகச் சொல்லப்படவில்லை. அவர் வாழ்க்கைச் சம்பவங்கள் ஒரு சில மட்டுமே பாடலாய் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

நாடார் ஜம்புலிங்கம் வாரார் வாரார்
ஜம்புலிங்கம் என்ற வீரன்
முறுக்கிவிட்ட மீசையோடே
முன்னம்பல் வரிசையோடே
மினுக்கி வைத்த கத்தியோடே
மின்னுங் கையில் வெடிகளோடே
வாரார் சொக்கத் தங்கம் நம்ம
நாடார் ஜம்புலிங்கம் வாரார் வாரார்

வழக்கறிஞர் லிங்கம், நாடார் உவரி[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்புலிங்கம்&oldid=3954709" இலிருந்து மீள்விக்கப்பட்டது