ஜம்சேத்ஜீ டாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா
Jamsetji Nasarwanji Tata
ஜம்சேத்ஜீ டாட்டா
பிறப்பு(1839-03-03)3 மார்ச்சு 1839
நவ்சாரி, பரோடா (தற்போதைய குசராத்து)
இறப்பு19 மே 1904(1904-05-19) (அகவை 65)
ஜெர்மன் பேரரசு
இனம்குசராத்தி மக்கள்; பார்சி மக்கள்
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
பணிநிறுவனர், டாட்டா குழுமம்
சமயம்சரத்துஸ்திர சமயம்
பெற்றோர்நுஸ்சீர்வஞ்ச் டாடா - ஜீவன்பாய்
வாழ்க்கைத்
துணை
ஹிராபாய் தபு

ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) (மார்ச் 3, 1839 - மே 19, 1904) இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார்.[1] இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது.

இளமைக் காலம்

ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா 1839ஆம் வருடம் மார்ச் மாதம் 3-ஆம் தேதி தெற்கு குஜராதில் உள்ள நவசாரி என்ற சிறு நகரத்தில் வாழ்ந்த நசர்வான்ஜி டாடா மற்றும் அவர் மனைவி ஜீவன்பாய் டாடாவிற்கு மகனாகப் பிறந்தார். பார்சி ஜொரோஸ்டிரியன் புரோகிதர்கள் குடும்பத்தில் டாடாதான் முதல் வணிகராகத் திகழ்ந்தார். குடும்பத்தின் குலத்தொழிலான புரோகிதத்தை நசர்வான்ஜி தேர்ந்தெடுத்திருந்தால் வழக்கமான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் துணிவுமிக்க இளைஞனான டாடா பாரம்பரியத்தைத் தகர்த்து தன் குடும்பத்திலேயே வணிகத்தில் நுழைந்த முதல் மனிதனாகத் திகழ்ந்தார். அவர் தன் வியாபாரத்தை அன்றைய பம்பாயாக இருந்த இன்றைய மும்பையில் ஆரம்பித்தார்.

தனது 14-வது வயதில் தன் தந்தையுடன் மும்பைக்கு வந்த ஜம்சேத்ஜீ டாடா எல்பின்ஸ்டோன் கல்லுாரியில் இன்றைய இளங்கலைப் பட்டத்திற் கு இணையான 'க்ரீன் ஸ்காலர்' -ஆக படிப்பை முடித்தார். அவர் மாணவனாக இருக்கும்போதே ஹிராபாய் தாபு[2] என்ற பெண்ணை மணந்தார்.[3] 1858-ல் கல்லுாரியிலிருந்து பட்டம் பெற்ற அவர் தனது தந்தை வேலை செய்த வணிக நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அச்சமயம் 1857 -ன் இந்திய புரட்சிக்காரர்களாக கருதப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடக்கப்பட்ட கொந்தளிப்பான காலகட்டமாக இருந்தது.

இறப்பு

1900-ஆம் ஆண்டு வியாபார விஷயமாக ஜெர்மனிக்குச் சென்றபோது, டாடா நோய்வாய்ப்பட்டார். ஆபத்தான நிலையிலிருந்த அவர் நெளஹீமில்[4] 19 மே 1904 ல் காலமானார். இங்கிலாந்தின் வோகிங், புரூக்வுட் மயானத்திலுள்ள, பார்ஸியினருக்கான இடுகாட்டில் புதைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. தொழில் முன்னோடிகள் : ஜாம்ஷெட்ஜி டாடா (1839 1904)
  2. "Family Tree of the Tatas". பார்க்கப்பட்ட நாள் 9 September 2006.
  3. "Biography on TIFR website". பார்க்கப்பட்ட நாள் 9 September 2006.
  4. Jamsetji Tata’s guiding spirit- growth of Indian Steel industry by Tata legacy. Tatasteel100.com. Retrieved on 28 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்சேத்ஜீ_டாட்டா&oldid=2712009" இலிருந்து மீள்விக்கப்பட்டது