ஜனார்தன் பாசுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனார்தன் பாஸ்வான்
ஜார்க்கண்டின் சட்டமன்ற உறுப்பினர் சத்ரா
பதவியில்
2009–2014
முன்னையவர்சத்யானந்த் போக்தா
பின்னவர்ஜெய் பிரகாஷ் சிங் போக்தா
பதவியில்
1995–2000
முன்னையவர்மகேந்திர பிரகாஷ் சிங் போக்தா
பின்னவர்சத்யானந்த் போக்தா
தொகுதிசத்ரா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சி
வாழிடம்(s)பிரத்தாப்பூர், ஜார்க்கண்ட், சத்ரா, சார்க்கண்டு
வேலைஅரசியல்வாதி
As of 21 நவம்பர் 2019

ஜனார்தன் பாஸ்வான் (Janardan Paswan) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் சத்ரா சட்டமன்றத் தொகுதியில் இருந்து பீகார் மற்றும் ஜார்கண்ட் சட்டசபைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் முதன்முதலில் 1995 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கு ஜனதா தளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 14 நவம்பர் 2000 அன்று பீகார் மாநிலம் பீகார் மற்றும் ஜார்கண்ட் என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, சத்ரா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி இரண்டு முறை வெற்றி பெற்றது. மீண்டும் 2009 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜனார்தன் பாஸ்வான் இராச்டிரிய ஜனதா தளம் கட்சி அளித்த வாய்ப்பில் சத்ரா மக்களின் ஆணையைப் பெற்றார். மேலும், ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் தனது இரண்டாவது பதவிக்காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

இவர் பார்த்தபூர் கிராமத்தில் பிறந்தார். பார்த்தபூர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். தர்பங்காவில் உள்ள கே.எஸ். சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றார்.[1] [2]

இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் இராச்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கிய முகமாக இருந்தார். இவர் இராச்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடனான நல்ல, நெருக்கமான உறவுக்காக மிகவும் பிரபலமானவர்.

2019 ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இவர் இராச்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [3] [4] [5] 2019 சட்டமன்ற தேர்தலில் சத்ரா விஷன் சபா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Election Commission of India".
  2. "Neta App – Rate and Vote for Your Favorite Leaders".
  3. "EXCLUSIVE: लालू के करीबी पूर्व राजद विधायक जनार्दन पासवान बीजेपी में होंगे शामिल". 23 March 2019.
  4. "BJP announces 52 names for Assembly polls". The Pioneer.
  5. "ETV Bharat". www.etvbharat.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனார்தன்_பாசுவான்&oldid=3816843" இலிருந்து மீள்விக்கப்பட்டது