ஜனனி ஜுகுமர்
Appearance
ஜனனி ஜுகுமர் என்பது ஜார்கண்டின் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதியின் நாக்புரி நாட்டுப்புற நடனமாகும். இது பெண்களை மையப்படுத்தி ஆடப்படும் நடனம். மந்தர், தோல் மற்றும் பான்சி போன்ற கருவிகளின் இசை பயன்படுத்தப்பட்டு நடனம் ஆடப்படுகிறது . [1] பெண்கள் ஒருவரையொருவர் கைப்பிடித்து, ஒரு நேர்கோட்டை உருவாக்கி, வட்டமிட்டுக்கொண்டே நடனமாடுகிறார்கள். நடன அசைவுகள் ஒவ்வொன்றும் பெண்மையின் அழகைக் கொண்டுள்ளன. பெண்கள் பாடி ஆடும்போது, ஆண்கள் இசைக்கருவிகளை வாசிக்கிறார்கள். இந்த நடனம் கரம் மற்றும் ஜிதியா திருவிழாவில் ஆடப்படுகிறது. [2] [3]
இந்த நடனம் முற்றத்தில் ஆடும் போது ஆங்ஞை என்றும் அழைக்கப்படுகிறது. [4]
விழாக்கள் மற்றும் நடனம் ஆடப்படும் முறைகளை அடிப்படையாக கொண்டு
- அங்னாய் சந்தந்தாரி,
- பஹில்சஞ்சா,
- அத்ராதியா,
- பின்சாரியா,
- உதாவா,
- ததௌவா,
- லஹாசுவா,
- கெம்தா,
- தைத்தாரா, மற்றும்
- ரஸ்கிரிடா போன்ற பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அதே போல பிராந்தியத்தின்படி, இது
- பூர்பஹா,
- பச்சிமஹா,
- உத்தரஹா,
- தக்ஷினாஹா,
- சோன்பூரியா,
- நாக்பூரியா,
- ஜஷ்புரியா,
- கங்பூரியா,
- அஸ்ஸாமியா என பிரிக்கப்பட்டுள்ளது. [5] நடனங்கள் ஆஷாத் மாதத்தில் (ஜூன்-ஜூலை) தொடங்கி, கார்த்திக் (அக்டோபர்-நவம்பர்) வரை தேவுதன் வரை தொடரும். பின்னர் திருமண சீசன் தொடங்கி டோம்காச் நடனத்தின் சீசன் வருகிறது. [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jharkhand: Culture". jagranjosh. 31 July 2013. பார்க்கப்பட்ட நாள் 27 September 2022.
- ↑ "Janani Jhumar Dance of Jharkhand". uchitya. பார்க்கப்பட்ட நாள் 27 September 2022.
- ↑ "जनानी झूमर". Jharkhandculture. பார்க்கப்பட்ட நாள் 27 September 2022.
- ↑ Vaividhya Jharkhand Samanya Gyan for JPSC, JSSC & other Competitive Exams. Disha Experts. 4 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2022.
- ↑ Jharkhand Samanya Gyan.
- ↑ Jharkhand General Knowledge 2022. Prabhat Prakashan.