கரம் (திருவிழா)
கரம் (Karam) என்பது சார்க்கண்டு, பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், அசாம், ஒடிசா , மேற்கு வங்காளம் ஆகிய இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருவிழா ஆகும். இது கரம்-தேவதை (கரம்-இறைவன்/கடவுள்), சக்தி, இளமை மற்றும் இளமையின் கடவுள் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1][2] காரியா, கோர்பா, கூலி / குலிஸ், பாகல், பைகா, பிஞ்ச்வாரி, பூமிஜ், ஓரான், முண்டா, சந்தாலிகள், குட்மி, கர்மலி, லோக்ரா போன்ற பல மக்கள் குழுக்கள் இத்திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.[3][4][5] இந்து மாதமான பாதோவின் (பத்ரா) பௌர்ணமியின் (பூர்ணிமா ) 11 வது நாளில் திருவிழா நடத்தப்படுகிறது. இது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வருகிறது. இளம் கிராமவாசிகளின் குழுக்கள் காட்டிற்குச் சென்று மரம், பழங்கள் மற்றும் பூக்களை சேகரிக்கின்றன. கரம் கடவுளின் வழிபாட்டின் போது இவை படைக்கப்படுகின்றன. இந்த காலகட்டத்தில், மக்கள் குழுவாக ஒன்றாக பாடி நடனமாடுகிறார்கள். முழு பள்ளத்தாக்கும் "நாள் முழுக்க" பறை தாளத்துக்கு நடனமாடுகிறது.[6][7]
கரம் ஒரு அறுவடை திருவிழா. இவ்விழாவிற்கு இயற்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த பண்டிகையின் போது மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் மரங்களை வணங்குகிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் விவசாய நிலங்களை பசுமையாக வைத்திருக்கவும், வளமான விளைச்சலை உறுதிப்படுத்தவும் இயற்கை அன்னையை வேண்டிக்கொள்கிறார்கள். நல்ல முளைப்புக்கான வழிபாடு தானிய பயிர்களின் வளத்தை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. கரம் தேவதை/கரம் தேவி (சக்தி, இளமை மற்றும் இளமையின் கடவுள்) திருவிழாவின் போது வழிபடப்படுகிறது. பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து கரம் மற்றும் குங்கிலியம் கிளைகளை வணங்குகிறார்கள். பெண்கள் நல்வாழ்வு, நட்பு மற்றும் சகோதரத்துவத்திற்காக ஜாவா பூவை பரிமாறி கொண்டாடுகிறார்கள்.[8]
மேலும் படிக்க
[தொகு]- Ekka, Reetu Raj (2016-02-16). "The Karam festival of the oraon tribals of India" (PDF). A socio-religious analysis. Archived (PDF) from the original on 16 February 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
- Bhagvat, Durga. "The Karma Festival and Its Songs" (PDF). Sahapedia.
{{cite web}}
: CS1 maint: url-status (link)
சான்றுகள்
[தொகு]- ↑ "Wangala, Tusu, Karma: 8 lesser-known harvest festivals". m.telegraphindia.com.
- ↑ "Karam festival shows to way to humanity: Harivansh". www.avenuemail.in. Archived from the original on 2019-04-30. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
- ↑ The Performing Arts of Jharkhand. B.B. Prakasan.
- ↑ India's Communities. Oxford University Press.
- ↑ Bagals of Border Bengal. Anthropological Survey of India, Government of India.
- ↑ "Festivals : Official Website of Government of Jharkhand". Jharkhand.gov.in. 2016-04-13. Archived from the original on 2016-09-18. பார்க்கப்பட்ட நாள் 2016-09-04.
- ↑ "Karama Festival". Odishatourism.gov.in. 2014-02-21. Archived from the original on 2015-09-26. பார்க்கப்பட்ட நாள் 2016-09-04.
- ↑ Karam — a Festival of Jharkhand | Indrosphere[தொடர்பிழந்த இணைப்பு]. Indroyc.com (26 September 2012). Retrieved on 2015-09-27.