ஜிவித்புத்ரிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிவித்புத்ரிகா
கொல்கத்தாவின் கங்கைக் கரையில் ஜிவித்புத்ரிகா அனுசரிக்கப்படுகிறது.
கடைபிடிப்போர்இந்துக்கள்
வகைமதத் திருவிழா
தொடக்கம்ஐப்பசியின் ஏழாவது முதல் ஒன்பதாம் சந்திர நாள்
முடிவுஐப்பசியின் ஒன்பதாம் சந்திர நாள்
நாள்செப்டம்பர்
நிகழ்வுவருடம் ஒருமுறை

ஜிவித்புத்ரிகா (Jivitputrika) (ஜித்தியா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது மூன்று நாட்கள் நீடிக்கும் இந்து பண்டிகையாகும். இது ஐப்பசி மாதத்தில் கிருஷ்ண- பட்சத்தின் ஏழாவது முதல் ஒன்பதாம் சந்திர நாள் வரை கொண்டாடப்படுகிற. இது முக்கியமாக இந்திய மாநிலங்களான பீகார், சார்க்கண்டு ,உத்தரப்பிரதேசம் [1] , நேபாளத்தின் மைதிலி, மகதி , போச்புரி பேசும் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இதில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக (தண்ணீர் குடிக்கமலிருந்து) நோன்பு கடைபிடிக்கிறார்கள்.[2]

சடங்குகள்[தொகு]

இது மூன்று நாள் திருவிழாவாகும்.[3]

  • நஹாய்-காய் : முதல் நாள் நஹாய்-காய், தாய்மார்கள் குளித்த பின்னரே உணவு உண்கின்றனர். நெய் மற்றும் இந்துப்பு கொண்டு தயாரிக்கப்படும் சைவ உணவை உண்கின்றனர்.
  • குர்-ஜிதியா அல்லது ஜிவிபுத்ரிகா நாள்: இது இரண்டாவது நாள் , இதில் தாய்மார்கள் தண்ணீர் கூட அருந்தாமல் கடுமையான விரதத்தை கடைபிடிக்கிறார்கள்.
  • பரணம்: தாய்மார்கள் நோன்பு திறக்கும் மூன்றாவது நாள் இது. காய்கறிகள்,கீரைகள், இலைகள், மதுவா ரொட்டி போன்ற பல்வேறு சுவையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

புராணக் கதை[தொகு]

ஒரு கதையின் படி, ஜிமுத்வான்ஹன் என்பவன் கந்தர்வர்களின் அரசராவான். அவன் தனது இராச்சியத்தை தனது சகோதரர்களுக்கு விட்டுக்கொடுத்து, தனது தந்தைக்கு சேவை செய்ய காட்டுக்குச் சென்றான். அங்கே ஒரு வயதான பெண் துக்கத்தில் இருப்பதைக் கண்டான். அவள் தான் நாகவம்சத்தைச் (பாம்புகளின் குடும்பம்) சேர்ந்தவள் என்று சொன்னாள். அவள் தன் ஒரே மகனை கருடனுக்கு மறுநாள் உணவளிக்க வேண்டும். ஜிமுத்வான்ஹன் அவளது ஒரே மகனைப் பாதுகாப்பதாக உறுதியளித்தான். மறுநாள் பாறைப் படுக்கையில் படுத்து கருடனுக்குத் தன்னை அர்ப்பணித்தான். கருடன் வந்து தன் நகங்களால் ஜிமுத்வான்ஹனைத் தாக்கினான். ஜிமுத்வான்ஹன் அமைதியாக இருந்தான். பிறகு கருடன் தாக்குவதை நிறுத்தியது. கருடன் அவனது அடையாளத்தைப் பற்றி விசாரித்தது. பின்னர் ஜிமுத்வான்ஹன் முழு கதையையும் விவரித்தான். அவனது கருணையால் ஈர்க்கப்பட்ட கருடன், நாகவம்சத்தவரிடமிருந்து எவரையும் உணவாகக் கோரமாட்டேன் என்று உறுதியளித்தது. இந்த புராணத்தை போற்றுவதற்காக தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருக்கிறார்கள்.[4]

சான்றுகள்[தொகு]

  1. https://www.prabhatkhabar.com/religion/jivitputrika-vrat-2020-jitiya-puja-vidhi-nahay-khay-date-and-timing-shubh-muhurt-jeevaputrika-vow-will-start-from-today-with-hi-khay-know-what-is-important-to-keep-in-mind-during-the-fast-rdy-2
  2. "Jivitputrika Vrat 2016 (Jitiya 2016) Date & Hindu Panchang - Indian Astrology". July 18, 2016. Archived from the original on ஜனவரி 25, 2017. பார்க்கப்பட்ட நாள் September 4, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Jivitputrika Vrat 2020 Date, Time & Significance". பார்க்கப்பட்ட நாள் 9 September 2020.
  4. "Significance of Jivitputrika Vrat". Archived from the original on 2020-09-30. பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிவித்புத்ரிகா&oldid=3930435" இலிருந்து மீள்விக்கப்பட்டது