உள்ளடக்கத்துக்குச் செல்

ஜக்கன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரம் ராஜு ஜக்கன்னா (Peram Raju Jakkana) 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1450) வாழ்ந்த புகழ்பெற்ற தெலுங்குக் கவிஞர் ஆவார். இவர் நியோகி பிராமணக் குடும்பத்தில் அக்கமாம்பா மற்றும் அன்னையாமத்யுலு ஆகியோருக்கு பிறந்தார். விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளரான பிரௌத தேவராயலுவின் அவையில் கவிஞராகப் பணியாற்றினார். அரசவையில் கருவூல அமைச்சராக இருந்த வெண்ணெலகண்டி சித்தன்னனாமத்யாவுக்கு இவர் அர்ப்பணித்த விக்ரமார்க்க சரித்திரமு என்பது இவரது புகழ்பெற்ற படைப்பாகும்.[1] இந்த படைப்பு உஜ்ஜைனியின் அரசன் விக்ரமாதித்தியனின் கதையை விவரிக்கிறது.

ஜக்கனா சிறீநாதருக்கும் போத்தன்னாவுக்கும் சமகாலத்தவர்.

இவரது படைப்பான விக்ரமார்க்க சரித்திரமு 1913 இல் சென்னையின் வாவில்லா அச்சகம் மூலம் வெளியிடப்பட்டது. [2] ஐதராபாத்தின் ஆந்திர பிரதேச சாகித்ய அகாதமி மூலம் 1968 ஆம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்டது.[3]

சான்றுகள்

[தொகு]
  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2009-04-10. Retrieved 2008-05-02.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Jakkana (1913). Vikramarka Charitramu (in Telugu). Chennai: Vavilla Ramaswamy Sastrulu and Sons. Retrieved 29 July 2020.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Jakkana (1968). Vikramarka Charitramu (in Telugu). Hyderabad: Andhra Pradesh Sahitya Akademi. Retrieved 29 July 2020.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்கன்னா&oldid=3804357" இலிருந்து மீள்விக்கப்பட்டது