ச. முத்துசெல்வி
தோற்றம்
எஸ். முத்துசெல்வி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2012 இடைத்தேர்தலில், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
- சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்ற வாக்கு விவரம்
| வேட்பாளர் | கட்சி | பெற்றவாக்குகள் | வாக்கு (%) |
|---|---|---|---|
| ச. முத்துசெல்வி | அ.தி.மு.க | 94,977 | 59.44 |
| ஜவஹர் சூரியக்குமார் | தி.மு.க | 26,220 | 16 |
| சதன் திருமலைக்குமார் | மதிமுக | 20,678 | 13 |
| முத்துக்குமார் | தேமுதிக | 12,144 | 8 |
| முருகன் | பாஜக | 1633 | 1 |
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் சங்கரன்கோவில் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சங்கரலிங்கத்தின் (1984-88) மகள் ஆவார். இவர் பொறியியல் பட்டதாரி மற்றும் சங்கரன்கோவில் நகராட்சியின் தலைவியுமாவார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-23. Retrieved 2012-03-23.
- ↑ தினமணி[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3024170.ece?homepage=true