உள்ளடக்கத்துக்குச் செல்

ச. சி. தர்மாதிகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
ச. சி. தர்மாதிகாரி
நீதிபதி-பம்பாய் உயர் நீதிமன்றம்
பதவியில்
14 நவம்பர் 2003 – 15 பிப்ரவரி 2020
பரிந்துரைப்புவி. நா. கரே
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 சனவரி 1960 (1960-01-26) (அகவை 64)
முன்னாள் கல்லூரிமும்பை பல்கலைக்கழகம்

ச. சி. தர்மாதிகாரி (S. C. Dharmadhikari) ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார்.[1]

இளமை[தொகு]

தர்மாதிகாரி 26 சனவரி 1960 அன்று வழக்கறிஞர்கள் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது தந்தை மறைந்த நீதிபதி சி. ச. தர்மாதிகாரி.[2] இவர் இளநிலை வணிகவியல் பட்டமும் இளங்கலைச் சட்டப் பட்டமும் பம்பாய் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இதன் பின்னர் 28 சூன் 1983 அன்று வழக்கறிஞராகச் சேர்ந்தார்.[3]

நீதிபதி[தொகு]

வழக்கறிஞராகப் பணியாற்றிய தர்மாதிகாரி 14 நவம்பர் 2003 அன்று பம்பாய் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணியிலமர்த்தப்பட்டார். பின்னர் நடைபெற்ற பணி இடமாற்றம் தொடர்பாகத் தனது பதவியிலிருந்து 15 பிப்ரவரி 2020 அன்று பணி விலகினார். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தனிப்பட்ட காரணங்களை மேற்கோள் காட்டி பதவி விலகினார்.[2] இவர் பதவி விலகிய நேரத்தில் பம்பாய் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hon'ble Justices High Court Mumbai". bombayhighcourt.nic.in/.
  2. 2.0 2.1 Deshpande, Swati (February 17, 2020). "S C Dharmadhikari: Senior Bombay high court judge S C Dharmadhikari resigns over transfer". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-22.
  3. "Justice Satyaranjan C Dharmadhikari".
  4. "Supreme Court collegium recommends transfer of Bombay HC judge RV More to Meghalaya HC" (in en). 19 February 2020. https://timesofindia.indiatimes.com/india/supreme-court-collegium-recommends-transfer-of-bombay-hc-judge-rv-more-to-meghalaya-hc/articleshow/74212585.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._சி._தர்மாதிகாரி&oldid=3995442" இலிருந்து மீள்விக்கப்பட்டது