ச. க. சுப்பிரமணியம்
தோற்றம்
சத்தியமங்கலம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1971–1976 | |
| முன்னையவர் | பி. ஜி. கருதிருமன் |
| பின்னவர் | கே. ஏ. செங்கோட்டையன் |
| தொகுதி | சத்தியமங்கலம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1934 சத்தியமங்கலம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
ச. க. சுப்பிரமணியம் (S. K. Subramaniam)(பிறப்பு 1934) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை சத்தியமங்கலம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளார். கல்லூரிக் கல்வியினை கோயம்புத்தூர் பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியில் பயின்றார். சுப்பிரமணியம் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 1971 | சத்தியமங்கலம் | திமுக | 31,873 | 55.60[2] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. Madras: Tamil Nadu Legislative Assembly Department. 1971. pp. 392–393.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.