சௌவீரதேசம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சௌவீர நாடு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சௌவீரதேசம் சிந்துதேசத்திற்கு தெற்கிலும்,மாளவதேசத்திற்கு வடமேற்கிலும், மண்ணும், மணலும் கலந்து பரவி இருந்த தேசம்.[1]
இருப்பிடம்
[தொகு]இந்த தேசம் சிந்துநதியை எல்லையாக வைத்துக்கொண்டு தென்மேற்கில் பாரியாத்ரம் என்னும் மலையின் அடிவாரம் வரையிலும், தென்கிழக்கில் இருக்கும் திரிகூட மலையின் வடமேற்கு பாகம் முழுமைக்கும் மூன்று திசைகளிலும் உயர்ந்தும், மேற்கு பாகத்தில் மட்டும் தாழ்ந்தும் ஒரு பெரிய பூமியாய் இருக்கும்.[2]
மலை, காடு, விலங்குகள்
[தொகு]இந்த தேசத்திற்கு தென் மேற்கு மூலையில் பாரியாத்ரமலை, தென் கிழக்கில் திரிகூடமலையும் உள்ளது. இந்த தேசத்தின் வடகிழக்கில் விதர்ப்பதேசத்தின் அருகில் தேவகிரி என்ற மலையும் உண்டு.
நதிகள்
[தொகு]இந்த சௌவீரதேசத்திற்கு தேவகிரி மலையில் உற்பத்தியாகி இத்தேசத்தை குறுக்காக தாண்டி , இந்த தேசத்தை செழிக்க வைத்து மேற்கு எல்லையில் ஓடும் சிந்து நதியுடன் இணைகிறது.
விளைபொருள்
[தொகு]இந்த தேசத்தில் பட்டு, கரும்பு, பருத்தி, திராட்சை, முதலியன அதிகமாய் விளைந்தும், இந்த தேசத்தவர்கள் மகாராட்டிரம், ஆந்திரம், யவனம், வங்கம், கோசலம், குரு, சூரசேனம் அகிய தேசங்களில் ரத்தினம், பட்டு முதலியனவையும் வியாபாரம் செய்கின்றனர்.
கருவி நூல்
[தொகு]- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009