சோமேசுவரர் (சகமான வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமேசுவரர்
பிரதாபலம்கேசவரா
சகமானா அரசன்
ஆட்சிக்காலம்சுமார். 1169-1178 பொ.ச.
முன்னையவர்இரண்டாம் பிருத்விராஜன்
பின்னையவர்பிருத்திவிராச் சௌகான்
இராணிகற்பூரதேவி
குழந்தைகளின்
பெயர்கள்
பிருத்திவிராச் சௌகான், அரிராஜன்
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்
தந்தைஅர்னோராஜா
தாய்காஞ்சனா-தேவி
மதம்இந்து சமயம்

சோமேசுவரர் (Someshvara) (ஆட்சி சுமார் 1169–1178 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார். இவர் தனது தாய்வழி உறவினர்களால் குசராத்தில் உள்ள சௌலுக்கிய அரண்மனையில் வளர்க்கப்பட்டார்.[1][2] இரண்டாம் பிருத்விராஜனின் மரணத்திற்குப் பிறகு, சகமான அமைச்சர்கள் இவரை தலைநகர் அஜ்மீருக்கு அழைத்து வந்து புதிய மன்னராக நியமித்தனர். இவர் அஜ்மீரில் பல சிவன் கோயில்களை நிறுவியதாகக் கூறப்படுகிறது.மேலும் பிருத்திவிராச் சௌகான் தந்தையாக அறியப்படுகிறார்.

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
  • R. V. Somani (1976). History of Mewar, from Earliest Times to 1751 A.D. Mateshwari. இணையக் கணினி நூலக மைய எண் 2929852.